English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Finalist
n. கடை ஆட்ட உறுப்பினர், இறுதி ஆட்டத்தில் பங்குகொள்ளும் விளையாட்டுக்காரர்.
Finality
n. முடிந்த முடிவு, கடைமுடிவு, மேல் தொடர்புக்கு இடமில்லாத முடிவு, ஐயத்துக்கிடமில்லா நிலை, அறுதி முடிவு, இறுதி நிகழ்ச்சி, அறுதிசெய்யும் மூலகாரணம்.
Finalize
v. நிறைவேற்று, முடிவுக்குக்கொண்டுவா.
Finals
n. pl. தேர்வு வரிசையில் கடைசி, இறுதித்தேர்தவு, ஆண்டிறுதித்தேர்வு.
Finance
n. பொதுநிதி, ஆட்சியாளரின் பண வருமானத்துறை, நாட்டுப் பொருள்வாய்த் துறை, பொதுநிதி ஆட்சி, பொதுச்செல்வ ஆட்சி முறை, (வினை) நிதி ஆட்சி செய், பண விவகாரங்களில் ஈடுபடு, பணங்கொடு, பணமளித்துதவு, பணப்பொறுப்பு ஏற்றுக்கொள், முதலீடு உதவு.
Financial
a. பொருள்பற்றிய, வருவாய் சார்ந்த, நிதிநிலைக்குரிய.
Financier
-1 n. பொருளியியல் ஆட்சி வல்லுநர், நிதிவிவகாரங்களில் திறமையுடையவர், பொது வருமானத்துறை ஆட்சியாளர்.
Financier
-2 v. பணங்கொடுக்கல் வாங்கல் செய், பணத்தை மோசடி செய்.
Find
n. கண்டுபிடிப்பு, கண்டுபிடித்த பொருள், புதையல், கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி, வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல், (வினை) கண்டுபிடி, தேடி எடு, முயன்று காண், கண்டுனர், ஆய்ந்து முடிவுசெய், நேரிட்டறி, பட்டறி கண்டுகொள், எதிருறு, கண்ணுறு, நேர்பட்டுக்காண், காண், அடை, எய்தப்பெறு, தேடிக்கொடு, அறியப்பெறு, தெரியப்பெறு.
Finder
n. இலக்கடைவுக்கருவி, பெரிய தொலைநோக்காடியைப் பொருள்மீது பொருத்த உதவும்படி அதனுள் அமைந்த சிறு தொலைநோக்காடி, உருப்பெருக்கியின் குறியடைவு அமைவு, நிழற்படக்கருவியின் இலக்கடைவு அமைவு.
Fine
-1 n. இறுதி, தண்ட வரி, தண்டனைக்கீடான கட்டணம், அபராதம், வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம், மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை, (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய், தண்டனைக்கீடான வரிசுமத்து, அபராதம்விதி, பதவி உரிமைகளுக்கீடான க
Fine
-2 a. நேர்த்தியான, செப்பமுடைய, அழகு வாய்ந்த, உயர்ந்த, மேன்மையான, பண்படுத்தப்பட்ட, சீர் செய்யப்பெற்ற, தௌதவான, தூய்மைமிக்க, கலப்பற்ற, தங்கவகையில் ஒன்பதரை மாற்றுடைய, வௌளி வகையில் உயர் தூய்மைப்படியுடைய, மற்ற பொருள்கள் வகையில் ஆயிரவீதக் கணக்கில் உயர் தூய்மை ந
Fine champagne
n. (பிர.) உயர்தர பிராந்தி வகை, மேன்மையான இன்தேறல் வகை.
Fine-draw
v. கண்ணுக்குப் புலப்படா வகையில் இரண்டு துண்டுத் துணிகளைச் சேர்த்துத் தைத்திணை.
Finedrawn
a. மிக மென்மையான, நுட்பமான, அளவு கடந்து மெல்லிய.
Fineish, finish
-1 a. ஓரளவு சிறந்த, சிறிதே உயர்ந்த.
Finery
-1 n. பகட்டணிமணி, பகட்டாடை ஒப்பனை, அணியலங்காரத் தோற்றம், புதுப்பாணி நடையுடை.