English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Finial
n. (க-க) கூறை முகட்டொப்பனை வேலைப்பாடு, தூபிமுகட்டின் இலைக்கொத்தணி ஒப்பனை.
Finical
a. அளவுமீறிய செயற்கை நேர்த்திவாய்ந்த, பகட்டாரவாரமான, போலிச்செப்பமுடைய, செயற்கைத் தன்மை வாய்ந்த, போலிப்பகட்டான.
Finis
n. இறுதி, முடிந்த முடிவு.
Finish
-2 n. இறுதிக்கட்டம், நரிவேட்டையின் இறுதிப்படி, முடிவு, முடிவுற்றநிலை, முழுநிறைவு, நிறைதிட்பம், செயல் தீர்ந்த செப்பம், நிறைவளிப்பது, நிறைவளிக்கும் கூறு, (வினை) முடித்து விடு, முடிவுக்குக் கொண்டுவா, அழி, செய்து முடி, இறுதிவரை தீட்டு, கடைசிப்பூச்சுக்கொடு, மு
Finisher
n. செய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர், செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம், கடுந்தாக்கு, தோல்வியுறச்செய்யும் பொருள், உறுபேரடி, அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி, அழுத்தும் மாத்துயர்.
Finite
a. முடிவுடைய, எல்லையுடைய, வரையறைக்குட்பட்ட, அளவிற்குட்பட்ட (கண.) எண்வகையில் வரைநிலையான, (இலக்.) வினைவகையில் முற்றான.
Finn
n. பின்லாந்து நாட்டு இனமக்களில் ஒருவர்.
Finnan, finnan haddock
n. புகையூட்டுப் பதனமுறையில் பக்குவப்படுத்தப்பட்ட மீன் இனவகை.
Finner
n. முதுகுத் துடுப்புடைய திமிங்கில வகை.
Finnic
a. பின்லாந்து நாட்டு மக்களினத் தொகுதியைச் சார்ந்த.
Finnish
n. பின்லாந்து மக்கள் மொழி, (பெ.) பின்லாந்து மொழியைச் சார்ந்த, பின்லாந்து மக்களைச் சார்ந்த, பின்லாந்து நாட்டுமக்கள் இனத் தொகுதிசேர்ந்த.
Finny
a. துடுப்புகள் கொண்ட, மீன் துடுப்புப்போன்ற, மீனைச் சார்ந்த, மீன்கள் நிறைந்து காணப்படுகிற.
Finsen light
n. கட்புலப்படா ஊதா மேற்கதிர் உண்டாக்கும் கருவி.
Fiord
n. நார்வே நாட்டில் செங்குத்தான மலைப்பாறைகளுக்கிடையேயுள்ள இடுக்கமான கடற்கால்களில் ஒன்று, இடுங்கு விடர்கழி.
Fiorin
n. வளைகொடிப் புல்வகை.
Fir, fir-tree
கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை.
Fir-apple, fir-ball, fir-cone
ஊசி இலை மரவகையின் காய்.
Fire
n. தீ, நெருப்பின் அழல், தீநா, தணற்கொழுந்து, சுடர், அனற்பொறி, எரிதல், அடுப்புக்கனல், உலை நெருப்பு, காட்டுப்பெருந்தீ, அழிவுப்பெருந்தீ, (செய்) மின்னல், எரிமலை அகக்கனல், வெப்பம், வெப்பு, காய்ச்சல், அழன்றெழும்,உணர்ச்சி எழுச்சி, சினம், கொதிகிளர்ச்சி, ஆர்வக்கனல், உயிர்த்துடிப்பு, கற்பனை, கவிதை யெழுச்சி, வேட்டு, வேட்டுத்தீர்வு, வேட்டுத்தொகுதி, தாக்குரை, கண்டனத்தொகுதி, எதிர்ப்பு, (வினை) தீவை, வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை, வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள், வெடிக்கவை, வேட்டுத்தகர், வணக்கமுறைவேட்டிடு, வெடிதீர்வுறு, வெப்பமூட்டு, தீயில் வாட்டு, மட்கல முதலியன கட்டு வேகவை, செங்கல் சுடு, சூடிடு, செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய், வெப்பமடை, சிவப்பாக்கு, விறகிடு, எரிபொருளுட்டு, சுட்டுத்தள்ளு, வெடித்து வீசியெறி, தள்ளு, வௌதயேற்று, கற்பனை தூண்டு, ஊக்கமூட்டு, கிளர்ச்சியூட்டு, உணர்ச்சியூட்டு, சினமூட்டு, கிளர்ந்தெழு, சினந்தெழு.
Fire engine
தீயணைப்பு எந்திரம், தீயணைப்பு வண்டி
Fire-alarm
n. நெருப்பு பற்றியதை அறிவிக்கும் தானியங்கிக் கருவி.