English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fire-arms
n. pl. சுடுபடைக்கலங்கள், வேட்டுப்படைக் கருவிகள், வெடிக்கும் போர்க்கருவிகள்.
Fireback
n. சுமத்திரா தீவுக்குரிய சிவந்த முதுகினைக் கொண்ட வேட்டைப் பறவை வகை, அடுப்பின் பின்சுவர், பின்சுவர் அணியிருப்புத்தகடு.
Fire-ball
n. பெரிய விண்வீழ் எரிகோளம், கோளவடிவமான மின்னல், எரிபொருள்கள் மநிறைக்கப்பட்ட பந்து வடிவடிமான போர்க்கருவி.
Fire-bird
n. தேனீயை உண்ணும் பறவை வகை.
Fire-blast
n. செடியினந் தாக்கும் நோய்வகை.
Fire-blight
n..கனிமரங்களுக்குக் கரிந்த தோற்றத்தைத்தரும் காளான் நோய்வகை.
Fire-box
n. நீராவி இயந்திரத்திலுள்ள நெருப்பறை.
Fire-brand
n. எரிகொள்ளி, எரியும் மரத்துண்டு, சச்சர வினைத் தூண்டுபவர், கலகக்காரர்.
Fire-brick
n. தீக்காப்புடைய செங்கல்.
Fire-brigade
n. தீயணைப்புப்படை.
Fire-clay,
சுடு செங்கலுக்குரிய களிமண்.
Fire-control
n. கப்பல்-கோட்டைப் பீரங்கிகளின் வேட்டுக் கட்டுப்பாட்டமைவு.
Fired
a. நெருப்பால் தாக்கப்பட்ட, சுடப்பட்ட, வெந்துபோன தோற்றம் கொண்ட, தீக்கொளுத்தப்பட்ட, பீரங்கியால் சுடப்பட்ட, தூண்டப்பட்ட.
Fire-damp
n. சுரங்க எரியாவி, நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றுடன் கலக்கும் சமயம் வெடிவிபத்து விளைவிக்கும் கரிய நீரகைவளி.
Fire-dog
n. அடுப்புக்கட்டை, விறகு அணைகோல்.
Fire-drake
n. விண்கீழ் கல், செர்மானிய பழங்கதை மரபில் தீயுமிழ் வேதாளம், கம்பவெடி.
Fire-drill
n. குச்சியைச் சுழற்றி அல்லது முறுக்கித் தீயுண்டாக்கும் பண்டைய கருவி, ஞெலிகோல்.
Fire-eater
n. மாயச்செப்பிடு வித்தைக்காரர், பயங்கர மற்போர் வீரர், கலகக்காரர், சண்டைப்பிரியர்.
Fire-engine
n. தீயணைக்கும் இயந்திரம்.
Fire-escape
n. எரியும் கட்டிடத்திலிருந்து ஆட்களை மீட்டுக் கொண்டு வருதற்குரிய கருவி.