English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flash-light
n. மின்பொறிக் கைவிளக்கு, கைப்பந்தம், கலங்கரை விளக்க ஔத, அடையாளக் குறியீடான விளக்கொளி, நிழற்படமெடுப்பதற்குரிய கூரொளி.
Flash-pipe
n. ஆவி விளக்கில் வரித்துளைகளுள்ள மிகைப் படியான குழாய்.
Flash-point
n. தீயை அருகிற் கொண்டுசென்றால் உடனே தீப்பற்றிக்கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை.
Flashy
a. கணநேரத்தோற்றமுடைய, தோன்றிமறைகிற, புறப்பகட்டான, பகட்டித்திரிகிற, உள்ளீடற்ற, போலியான, மலிவுச்சரக்கான, அற்பமான.
Flask
n. குடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.
Flasket
n. துணிக்கடை, சிறிய குப்பி.
Flasks
குடுவைகள், சேமச்செப்பு, சேமக்குடுவை
Flat
-1 n. அறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம்.
Flat
-2 n. தட்டையான பொருள், தட்டையான பகுதி, சமதள நிலம், ஆழமற்ற நீர்நிலைப்பகுதி, சதுப்பு நிலம், தட்டையான அடித்தளமுள்ள படகு, அகல்விரிவான உள் ஆழமற்ற கூடை, அகழ்வு புடைப்புக்காட்டாத சமதளக்கலை, நாடக மேடையில் இடையே ஏற்றி இறக்கப்படும் காட்சி ஓவியத்திரை, அரைத்தொனியளவு,
Flat-boat
n. தட்டைப்படகு.
Flat-fish
n. தட்டைக் கடல்மீன் வகை.
Flat-foot
n. உட்குழிவுப்பகுதி தட்டையாகவுள்ள காலடி.
Flat-iron
n. துணித்தேய்ப்புப்பெட்டி.
Flats
அடுக்குமனை, அடுக்கு வீடுகள்
Flatten
v. தட்டையாக்கு, தட்டையாகு.
Flatter
v. முகப்புகழ்ச்சிசெய், இசசகம் பேசு, பொய்யாகப் புகழ்ந்துபசப்பு, கெஞ்சி ஆதரவைப்பெறு, மட்டுமீறி முகமனுரை, அளவுமீறிப் புகழ், பெருமைப்படுத்திப் பேசு, வீணான நம்பிக்கையைத் தோற்றுவி, தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி, மனநிறைவுசெய், மகிழச்செய், கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு, கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு, மிகைபடப் பாராட்டுக்கூறு.
Flattery
n. முகப்புகழ்ச்சி, தகாப்பாராட்டுரை, மட்டுமீறிய புகழ்ச்சி, போலிப்புகழ்ச்சி.
Flattish
a. ஓரளவு தட்டையான.
Flatulence
n. வயிற்றுப்பொருமல்.
Flatulent
a. உணவுக்குழாயில் வாயுவைப் பிறப்பிக்கின்ற, உணவுக்குழாயின் வாயுவால் விளைவுற்ற, பொருமலுக்கு ஆட்பட்ட, வயிற்றில் பொருமலுள்ள, உப்பலான, செருக்கு மிக்க, வீம்புடைய, காற்றுப்பிரிகிற, வெறுமையான, பயனற்ற, பகட்டான.