English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flag-waver
n. கிளர்ச்சியாளர்.
Flail
n. சூடடிக்கும் கோல், நுனியில் சிறிய பளுவான கழி தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தடி, முற்காலச் சணல் வெட்டும் கருவி.
Flair
n. இயல்புதிறம், சிறந்ததைத் தெரிந்தெடுக்கும் நுட்பத் திறம், உள்ளார்ந்த நுண்ணியல் தேர்வாற்றல்.
Flak
n. செர்மானியரது வழக்கில் விமான எதிர்ப்புப் பீரங்கி வேட்டு.
Flake
-1 n. சூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை, மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம், வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம், விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம்.
Flake
-2 n. காற்றில் மிதங்தலைபடும் பஞ்சுத்துணுக்கு, வீசி எறியப்பட்டுக் காற்றில் மிதக்கும் எரிதழல் இணுக்கு, சீவல் துணுக்கு, உரித்தெடுக்கப்பட்ட மெல்லிய பரந்த சிம்புப் பகுதி, சிறு விரல்போன்ற துண்டு, மிதவைத் துய், மீனிறைச்சியின் இயற்கைப்பாளம், அடை அடுக்கு, செந்நிறத
Flake-white
n. ஈயங்கலந்த வெண்கலவையிலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொருட்கூறு.
Flalg-ship
n. கப்பல் தளபதி இவர்ந்து செல்லும் கொடிக்கப்பல்.
Flam
n. பொய்க்கதை, சூழ்ச்சிப்பொறி, ஏமாற்றுமுறை.
Flambeau
n. சுளுந்து, மெழுகுதிரிகளை இணைத்துக்கட்டிய தீப்பந்தம்.
Flamboyant
n. தீக்கொழுந்து நிறமுள்ள மலர்வகைகளில் ஒன்று, (பெ.) அலையெழுந்து வீசியெறியும் தீக்கொழுந்து போன்ற, (க-க.) அலைத்தெழும் தழல்போன்ற தோற்றம் வாய்ந்த வேலைப்பாடுடைய, அழல்வண்ணப் பூம்பகட்டு ஒப்பனையுடைய, வண்ணப்பகட்டான, வீணாரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான.
Flame
n. அனற்கொழுந்து, தீநாக்கு, எரிதல் ஆவி, ஔதப் பிழம்பு, சுடரொளி, ஔதவண்ணம், ஆர்வக்கனல், பற்றார்வம், கருத்துவேகம், சீற்றம், கடுஞ்சினம், முனைத்தெழும் காதல், ஆர்வக்காதலர், அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று, (வினை) பிழம்பாக வீசு, தழலாகப் பரவு, எரிதழல் ஔதச்சின்ன வழியாகச் செய்தி அறிவி, எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து, உணர்ச்சிகொந்தளித்தெழு, சினந்தெழு, எழுச்சியூட்டு, சினமூட்டு, காதல் வெறியூட்டு.
Flamen
n. பண்டைய ரோமாபுரித் தெய்வத்துக்குரிய சமய குரு.
Flaming
a. கொழுந்துவிட்டெரிகிற, கடுவெப்பமான, மிகு சூடான, ஔதநிறமுடைய, உருத்தெழும் வண்ணமுடைய, உயர்வு நவிற்சியான, அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
Flamingo
n. மராளம், நாறைபோன்ற, பெரிய செந்நிறப் பறவை வகை.
Flammenwerfer
n. (செர்.) போரில் நெருப்புக்குழம்பைப் பீறிட்டு வௌதப்படுத்தும் இயந்திரப்பொறி.
Flan
n. பழம் முதலியனவுள்ள பணியார வகை.
Flanerie
n. (பிர.) சோம்பேறித்தனமாயிருத்தல், காலத்தை வீணாக்குதல்.
Flaneur
n. (பிர.) சோம்பேறி, வீணாகச் சுற்றித்திரிபவன்.
Flange
n. தட்டையான விளிம்பு, நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை, விலாவெலும்பு, (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.