English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fixature
n. தலைமுடியைப் படியவைக்கின்ற பசைப்பொருள்.
Fixed
a. நிலையான, உறுதியான, நிலைப்பட்ட, திடமான.
Fixedly
adv. நிலையான தன்மையில், ஆவலுடன், கவனமுடன், கருத்துடன், கூர்நோக்குடன்.
Fixedness
n. உறுதிநிலை, அசைக்க முடியாத தன்மை, நிலையான இயல்பு, பற்றுறுதியுள்ள பாங்கு.
Fixings
n. pl. செயற்களக்கருவி, துணைக்கருவித் தொகுதி, தளவாடம், துணைச்சாதனம், உடையின் சிங்காரிப்பு, பின் சோப்புகள், புற ஓட்டுகள்.
Fixity
n. இயங்கா நிலை, அசையாது பொருத்தப்பட்ட நிலை, உறுதிமாறா நிலை, நிலைத்த தன்மை, நிலைபேறான தன்மை.
Fixture
n. இட உறுதிப்பாடு, ஓரிடத்திற் பொருத்தப்பட்ட பொருள், இணைத்துக் கட்டப்பட்ட பொருள், ஓர் எல்லைப் பட்ட ஆள், எல்லைக்குட்படுத்தப்பட்ட பொருள், நிலை நாட்டப்பட்டுள்ளவர், கேளிக்கையாளர், கூட்டுச்சந்திப்பு, பந்தய ஆட்ட ஏற்பாடு, கேளிக்கையாளர் கூட்டுச் சந்திப்புக்குரிய நாள், பந்தயத்திட்டம் செய்யப்பட்டுள்ள காலம்.
Fizgig, fisgis
காதலாட்டம் ஆடித்திரியும் பெண், ஈர மருந்துப்பொடியால் இயக்கப்படும் வாணவெடிவகை, சீன வெடி, சிறுதிறப் பொறி, அற்பப்பொருள், வலைத்துன்னல் வேலைப்பாடு, திமிங்கில மெறியும் வேல், (பெ.) நிலையற்ற துடிப்புப் போக்குடைய, உறுதியற்ற, படபடப்பான.
Fizz
n. உயர்ந்த தேறல் வகை, சீறி நுரைத்தெழும் ஒலி, (வினை) 'உசு'என்று ஒலி செய், கடகடவென்றிரை.
Fizzer
n. 'உசு'என்று ஒலி செய்கின்ற பொருள், மிகச் சிறந்த பொருள், மிகவிரைவாகச் செல்லும் பந்து.
Fizzle
n. மென்மையான 'உசு'என்று ஒலி, திக்கிப்பேசும் ஒலி, குளறுபடி, தோல்வி, (வினை) மென்மையான 'உசு'என்று ஒலி செய், மென்மையாகத் திக்கிப்பேசு, தெற்றிப்பேசு.
Flabbergast
v. திடுக்கிடச்செய், வியப்புறச்செய், வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய், திகைப்பினால் ஊமையாக்கு.
Flabby
a. தளதளப்பாகத் தொங்குகிற, சுருக்கம் விழுந்த உரமற்ற, கெட்டியில்லாத, மனத்திட்பமில்லாத, மொழி நடை முதலியவற்றின் வகையில் வலிவற்ற, தளர்ந்த.
Flabeelate, flabelliform
a. (விர., தாவ.) விசிறி வடிவான.
Flaccid
a. தொங்கு சதையுடைய, தளர்வுற்றுத் தொங்குகிற, சுருக்கும் விழுந்த, நெகிழ்வான, சோர்வுற்ற, வலிமையற்ற, உரமற்ற, நரம்புத் தளர்ச்சியுடைய, கெட்டியில்லாத.
Flag
-1 n. துகிற்கொடி, படைச்சிறப்புக்கொடி, விருதுக்கொடி, அழகொப்பனைக்கொடி, விளம்பரக்கொடி, குறிப்படையாளக்கொடி, கொடிக்கப்பல், நாய்வகையில் சடை நிறைந்த வால் (வினை) கொடிகளால் ஒப்பனை செய், கொடியை முகட்டிற் கட்டு, கொடி அடையாளவழியே செய்தி அறிவி, குறிப்படையாளக் கொடிச்சி
Flag
-2 n. பாவு கல், தட்டையான தனவரிசைக்கல், (வினை) தளவரிசைக் கற்களாற் பாவு.
Flag
-3 n. பறவைச் சிறிகின் இறகினாலான எழுதுகோல்.
Flag
-4 n. நீண்டு அலகுபோன்ற சொரசொரப்பான இலைகளையுடைய செடிவகை, செடிவகையின் நீண்ட அலகுபோன்ற சொரசொரப்பான இலை, நீண்டு அலகு போன்ற சொரசொரப்பான இலைகளையுடைய செடிகளின் தொகுதி.