English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fitchew
n. மரநாய் ஒத்த ஊனுண்ணும் விலங்கவகை.
Fitful
a. திடீர்ச்செயலான, விட்டுவிட்டு இயங்குகிற, இடையிடையே முயலுகிற.
Fitings
n. pl. துணைக்கருவிகள், கருவிகலத் தொகுதி, தளவாடங்கள், தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி, இணைப்பொருத்தக் கட்டுமானம், பொருத்தமான வேலையாளின் பணித்துறை.
Fitment
n. தட்டுமுட்டுப்பொருள், துணைக்கருவி.
Fitness
n. பொருத்தம், தகுதி, ஏற்றமைவு, பொருத்தும் நேர்மை, ஏற்பமைதி, ஒழுக்கநலம்.
Fit-out
n. ஆடையணிமணித் தொகுதி, தளவாடம், கருவிகலத் தொகுதி.
Fitter
n. பொருத்துவது, பொருத்துபவர், இணைப்பது, இணைப்பவர், பொறியின் பகுதிகளை இணைப்போர், இசைவிப்போர், துணிகளை ஏற்றவாறு வெட்டுவதையும் பொருத்துவதையும் மேற்பார்வை செய்பவர்.
Fitting
a. பொருத்தமான, இசைவான, ஏற்ற, தக்க, சரியான.
Fitting-out
n. பொருத்தமானதும் தேவையானதுமான பொருள்களைச் சேகரம் செய்து அளித்தல்.
Fitting-shop
n. பொறியின் பகுதிகளை இசைவித்துப் பொருத்தும் பட்டறை.
Fit-up
n..நாடக அரங்க வகையில் தற்காலிகமான மேடையமைப்பு, எடுத்துச்செல்லக்கூடிய ஒப்பனைக்கருவிகளை உடன்கொண்ட மேடையமைப்பு, ஊர் ஊராகக் கொண்டு செல்லக்கூடிய தற்காலிகச் சிறு திரை ஓவியங்கள்.
Five
n. ஐந்து, ஐந்துகொண்ட தொகுதி, ஐந்து என்ற எண் கொண்ட சீட்டு, ஐந்து எண்ணுடைய ஆட்டக்கட்டை, ஆட்டத்தில் எடுத்த ஐந்து வெற்றிக்குறி மதிப்புக்கள்.
Fiveday week
n. ஐந்து வேலைநாளகளைக் கொண்ட வாரம்.
Fivefinger
a. இசைக்கருவியில் ஐந்து விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கிற, ஐந்து விரல்களும் வகுத்துக் குறிக்கப்பட்ட இடத்திலேயே எப்போதும் வைத்திருக்கவேண்டிய பயிற்சி முறை சார்ந்த.
Fivefold
a. ஐந்து மடங்கான, ஐந்து பிரிவுகள் கொண்ட, ஐந்து முறை மடித்த பருமனுள்ள, (வினையடை) ஐந்துமடங்காக.
Fives
n. pl. ஐந்தாவது தரத்துக்குரிய புதைமிதித்தொகுதி, ஐந்தாவதுதரக் தகையுரைத்தொகுதி, ஐந்து நுற்றுமான விழுக்காடுடைய பங்குகள், பந்தாட்டவகை.
Fix
n. இக்கட்டுநிலை, சிக்கல்நிலை, வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு, (வினை) பதியவை, ஒட்டு, அடித்திறக்கு, கட்டியிறுக்கு, இணை பொருத்து, நிலைநாட்டு, அசையாது நிலைநிறுத்து, உறுதிப்படுத்து, இடவுறுதி செய், திட்பமாக்கு, கால அறுதிசெய், நிலவரமாக்கு, நிலைத்திருக்கச் செய், மாறாதிருக்கச் செய், மாறுதல் தடுத்து நிறுத்து, முடிவு செய், மனத்தில் ஊன்றவை, நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து, கெட்டியாக்கு, உறையவை, இறுகவை, கட்டிவை, முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து, விறைப்பாக்கு, முறைக்க வை, பார்வை நேராகப் பதியவை, பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு, கவர்ச்சிசெய்து நிறுத்தியவை, மயக்கி நிறுத்தி, ஒழுங்குபடுத்தி அமை, ஏற்பாடுசெய், நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை, திருத்து, சீர்ப்படுத்து.
Fixation
n. பொருத்துதல், பொருத்தப்படல், கெட்டியாகும்படி செய்தல், இறுகுதல், உறைவு, உறுதிப்பாடு, அறுதி, நிலைப்பு, மாறாநிலை, திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை, ஆவியாகா நிலை, வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை, மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை, வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை, இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.
Fixative
n. சாயங்கள் நிலையாக இருக்கும்படி செய்யும் பொருள், (பெ.) பொருந்தும்படி செய்கின்ற, நிலைபடுத்துகின்ற.