English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Florist
பூ விற்போர், மலர் விற்பனையாளர்
Florist
n. மலர்பண்ணை வளர்ப்பவர், பூ விற்பவர், மலர் வகைகளை ஆயும் மாணவர்.
Floruit
n. பிறந்தநாளும் இறந்தநாளும் சரியாகத் தெரியாத போது குறிப்பிடப்படும் வாழ்வுக்காலம்.
Floscular, flosculous
a. சிறுமலர்களைக்கொண்ட, கொத்துமலர்களையுடைய.
Flosh, floss
பட்டுப்பூச்சிக்கூட்டினைப் போர்த்துள்ள சொரசொரப்பான பட்டு, பட்டுச் செய் தொழிலின் கழிவுப்பொருள், துன்னலிலும் பல்தூரிகையிலும் பயன்படுத்தப்பெறும் முறுக்குறா மென்பட்டிழை, பஞ்சுபோன்ற செடியினப்பொருள், மரப்பஞ்சு, பஞ்சியல்துய்.
Flotilla
n. சிறு கப்பற்படை, சிறு கப்பல்களின் தொகுதி படகுகளின் தொகுதி.
Flotsam
n. உடைந்த கப்பலின் மிதக்கும் சேதப்பொருள்கள், சிப்பி முட்டைகளின் தொகுதி.
Flounce
-1 n. உடலின் குதியாட்டம், உறுப்பின் துடிப்பாட்டம், வெட்டியிழுப்பு, குலுக்கம், (வினை) குதித்தாடிச்செல், தள்ளடிச்செல், உடலை அலட்டிக்கொள், திடுமெனப்பாய், ஆட்டிக்கொண்டுசெல், (வினையடை) தடுமாறிக்கொண்டு, தள்ளாடிய நிலையில்.
Flounce
-2 n. குஞ்சம், கொய்சகம், தொங்கல், (வினை) குஞ்சம் வைத்துத் தை, கொய்சகம் தைத்து ஒப்பணைசெய்.
Flounder
-1 n. தட்டையான சிறுமீன் வகை.
Flounder
-2 n. தடுமாற்றம், தள்ளாடிச்செல்லுதல், (வினை) சேற்றில் தத்தித்தடுமாறு, தள்ளாடிச்செல், தவறுகள் செய், சீர்கேடாகத் தொழிலியற்று, சிந்தனையில் தடுமாற்றமடை, பேச்சில் முட்டுபட்டு.
Flour
n. மாவு, அரைத்த மா, நன்கு சலிக்கப்பட்ட நுண்ணிய மாப்பொருள், கோதுமை மாவு, மென்னயத் தூள்வடிவான பொருள், (வினை) மாத்தூவு, மாவாக அரை.
Flour-blot
n. மாச்சலிக்கும் அரிப்பு.
Flour-box
n. மாத்தூவுதற்கான துளையுடைய தகரப்பெட்டி.
Flourish
n. செழுமை, கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம், இசைவண்ணப்பாடல், உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம், கைவீச்சு இயக்கம், படைக்கலச் சுழற்சி வீச்சு, பகட்டணி நயமிக்க சொன்னடை, அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து, அலைவீச்சணியுடைய எழுத்துரு, (வினை) வளங்கொழி, வெற்றிமேல் வெற்றிபெறு, தழைத்தோங்கு முற்போக்கடை, வளம்பட வாழ், கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு, செயற்பட வாழ், வீச்சணியெழுத்து எழுது, வண்ண அணிநயம்பட பேசு, அணிநயம் மல்க எழுது, கைகால்களைச் சுழற்றி வீசு, படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு, கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Flourishing
a. செழித்தோங்குகிற, வளமான வாழ்வு பெற்றுள்ள, பகட்டிக்கொள்ளுகிற.
Flourishy
a. அழகு வீச்சுக்கள் மலிந்த.
Floury
a. மாவு போர்த்துள்ள, மாவு போன்ற.