English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Floccus
n. (ல.) கம்பளி மயிர்த்திரள், மெல்லிழைத்திரள்.
Flocinaucinihili-pili-fication
n. மதிப்பு வைக்காமல் இருத்தல்.
Flock
-1 n. மக்களின் கூட்டம், ஓரின விலங்கின் திரள், இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம், ஆட்டுமந்தை, மாட்டுமந்தை, ஈட்டம், கணம், கிறித்தவத்திருக்கூட்டம், குழந்தைகள் கொண்ட குடும்பம், மாணவர்குழாம், (வினை) கூடு, திரள்.
Flock
-2 n. மயிர்க்கற்றை, பஞ்சுக்குஞ்சம்.
Flock-bed
n. கம்பளி மயிர்க்கழிவு அல்லது கிழிந்த துணிகள் திணிக்கப்பெற்ற படுக்கை.
Flockmaster
n. ஆட்டுக்பண்ணையாளர்.
Flock-paper
n. பசைதடவிக் கம்பளிமயிர்த்திரள் தூவப்பெற்றுள்ள சுவர்த்தாள்.
Floe
n. மிதக்கும் பனிக்கட்டிப்பாளம்.
Flog
v. பிரம்பினாலடி, வளாறினால் வீசு, கசையடிகொடு, படிப்பை அடித்து ஏற்று, சாட்டையாலடித்து முடுக்கு, தூண்டிலை அடுத்தடுத்து வீசி மீன்தேடு.
Flogging
n. சாட்டையடி, சவுக்கடி, தல்லுதல்.
Flong
n. பதிவுத் தகட்டினால் அச்சடிப்பதற்குச் செப்பனிட்ட தாள்.
Flood
n. வௌளப்பெருக்கு, ஆற்றுப்பெருக்கு, திடீரெனப்புரண்டாடிவரும் வௌளம், நிலமீது பரவும் பெருவௌளம், ஊழிவௌளம், சோனைமாரி, கண்ணீர்ப்பெருக்கு, கூட்டம், திரள், (வினை) வௌளப்பெருக்கெடு, வௌளத்தில் மூழ்குவி, பெருவௌளமாக்கு, பாசன வளம் பரப்பு, மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு, மலிவுபெறு பேரளவில்வந்து அடை, நிரம்பு, குவி, பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Flood-gate
n. நீர்பெருக்குவதற்குரிய அடிவாய் மதகு, நீர் வடிப்பதற்குரிய நெடுவாய் மதகு.
Flood-light
n. நிழல் விழாதபடி பல திசைகளிலிருந்து வீசப்படும் பேரொளிப்பெருக்கு, (வினை) பலதிசைகளிலிருந்து பேரொளி வீசச்செய்.
Floodlighting
n. பரப்பு விளக்கம்.
Floodlit
a. பேரொளி பாய்ச்சப்பெற்ற.
Floodmark
n. அலையெழுச்சி அல்லது வௌளம் உயர்ந்து எட்டிய அடையாளம், வௌள உச்சநீர் வரை.
Flood-tide
n. வேலி ஏற்றம், அலையெழுந்து முன்னேறும் கடல்வௌளம்.
Floodway
n. வௌளநீர் செல்வதற்கான செயற்கைவழி.