English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flimsy
n. மெல்லிய தாள், செய்தியாளரது படி, (பெ.) எளிதில் அழிக்கப்படக்கூடிய, நொய்தான, உறுதியற்ற, மெலிந்த, அற்ப, விளையாட்டுத்தனமான, மேலீடான.
Flinch
-1 v. திமிங்கிலத்தைத் துண்டு போடு, கடற்சிங்கத்தைத் தோல் உரி.
Flinch
-2 v. பின்வாங்கு, தயங்கு, கூசு, இடங்கொடு, அஞ்சி விலகு.
Flinders
n. pl. சிதறல்கள்.
Fling
n. வீச்சு, எறி, சூதாட்ட எறி முயற்சி, வெற்றிதோல்வித் தேர்வு முயற்சி, சாட்டுரை, இகழுரை, ஏளன வகைச்சொல், சுடுசொல், பாய்ச்சல், திடீர் முழுக்கு, வெறித்த ஈடுபாடு, முழுநிறை இன்பத்தோய்வு, (வினை) எறி, வீசு, சுண்டியெறி, வீசியெறி, வேகமாகச்செலுத்து, எய், வேட்டெறி, திடுமெனநீட்டு, திடுமெனப் பார்வை செலுத்து, திடீசென அனுப்பு, வௌதயேறச்செய், படைப்பிரிவினைத் திடமெனத் தாக்குதலுக்கு அனுப்பு, திடுமெனச் சிறையில் தள்ளு, மற்போரில் மண்மீது வீழ்த்து, குதிரை வகையில் நிலமீது தூக்கியெறி, உதைத்துத்தள்ளு, சென்றுவிழும்படி செய், அணைப்பு ஏற்கச்செய், முழுவேகத்துடன் ஈடுபடுவி, முழுநிறைவாக ஒப்படைட, சொற்களைச் சென்று உறைக்கும்படி கூறு, வசைச்சொற்களைவீசு, மணம் படர்வி, ஔதகாலு.
Flint
n. சக்கிமுக்கிக்கல், கன்மத்தின் பாளம், நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள், (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட, கடினமான.
Flint-glass
n. முன்பு சக்கிமுக்கிக் கல்லினாற் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடிக்கலம்.
Flint-lock
n. சக்சிமுக்கியால் பொறியூட்டி இயக்கப்படத்தக்க துப்பாக்கி, சக்சிமுக்கியால் பொறியூட்டி இயக்கப்படத்தக்க துப்பாக்கி விசை.
Flinty
a. சக்கிமுக்கிக்கல் கொண்ட, சக்கிமுக்கிக்கல் நிரம்பவுள்ள, சக்கிமுக்கிக்கல் போன்ற, கடினமான, கொடிய, இரக்கமற்ற.
Flip
-1 n. சுளீரென்ற இலேசான அடி, விரல் நொடி, தூண்டும் அடி, சவுக்குச் சொடுக்கு, (வினை) சுண்டிவிடு, விரலால் நொடித்து இயக்கு, விரலால் மெல்லத்தட்டு, இலேசாக அடி, சுண்டிச்செலுத்து.
Flip
-2 n. பழுக்கக் காய்ந்த இரும்பால் சூடாக்கப்பட்ட இன்மதுவகை.
Flip-flap, flip-flop
குட்டின்கரண வகை, வாணவெடி வகை, வேடிக்கைகாட்டுமிடங்களில் சுழல் இராட்டினம் போன்ற அமைவு, (வினையடை) அடிக்கடி தட்டிக்கொண்டு.
Flippancy
n. சளசளப்பு, துடுக்குத்தனம், கவலையின்மை.
Flippant
a. வம்பளக்கிற, கருத்து உறுதியற்ற, ஆழ்ந்த சிந்தனையற்ற, கவளையற்ற, பொறுப்பற்ற, முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற, மட்டுமதிப்பற்ற.
Flipper
n. ஆமை-கடற்பறவை வகைகளில் நீந்துதற்குப் பயன்படு உறுப்பு.
Flipperty-flopperty
a. தளர்த்தியான, தொங்குகிற.
Flirt
n. திடீர்க்குலுக்கு, காதல் விளையாட்டாளர், (வினை) அதிர்ச்சியூட்டு, குலுக்கி இயங்கு, விளையாட்டுக் காதல் புரி, சாகசஞ்செய்.
Flirtation
n. பிலுக்குநடை, விளையாட்டுக் காதல்.
Flirtatious
a. குலுக்கிமினுக்கும் பாங்குள்ள, விளையாட்டுக்காதலில் ஈடுபடுகிற.
Flirtish
a..குலுக்கிமினுக்கும் இயல்புள்ள, காதல்விளையாட்டுப்பான்மையுள்ள.