English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flemish
-1 n. பிளாண்டர்ஸ் மாநில மொழி, (பெ.) பிளாண்டர்ஸ் மாநிலஞ் சேர்ந்த.
Flemish
-2 v. வேட்டைநாய்வகையில் மோப்பம் பிடிக்கும் வேளையில் வாலையும் உடலையும் உலுக்கு.
Flesh
n. தசை, உடலின் ஊன்முழுத்தொகுதி, விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள், இறைச்சி மாமிச உணவு, விலங்கின் உடல், உடம்பு, பருவுடல், விலங்கு, விலங்கியல்பு, விலங்குக்கூறு, மனிதனின் உடல் சார்ந்த இயல்பு, மனித இனம், உடலுறவு, உறவினர் பாசம், உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி, பழத்தின் சதைப்பற்று, தின்னும் களைப்பகுதி, கொழுப்பு, தசை வளம், உடலோடு கூடிய உயிர், தோலின தசைப்பக்கம், (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு, குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு, வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய், வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார், அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார், மைக்கோலை வழங்கிப் பதம்பார், தசை பரிசாக வழங்கு, பழகித்தேறும்படி செய், திணி, கொழுக்கவை, தசையூட்டு அவா நிரப்பு, தசைகொழுக்க வை, தசையைச் சுரண்டி எடு.
Flesh-brush
n. குருதி ஒட்டத்தைத் தூண்டி விரைவுபடுததும் மயிர்க்குச்சு வாய்ந்த தூரிகை.
Flesh-colour
n. தசைநிறம், மஞ்சள் சார்புகொண்ட இளஞ்சிவப்பு நிறம்.
Flesh-coloured
a. தசைநிற்மான, மஞ்சள் சாயல் கொண்ட இளஞ்சிவப்பு நிறமான.
Flesh-fly
n. இறந்த உடற்சதையில் முட்டையிட்டு முட்டைப்புழுக்களை வளரவிடும் ஈ வகை.
Flesh-glove
n. குருதி ஓட்டத்தைத் தூண்டி விரைவுபடுத்தும் மயிர்க்குச்சு வாய்ந்த கையுரை.
Fleshings
n. pl. உடலமைப்போடு நெருக்கி இயற்கையான தோலின் நிறத்தோடு கூடி இணைந்த உடை.
Fleshly
a. தசைக்குரிய, உடல்சார்ந்த, உடல்வாழ்க்கையோ டொட்டிய, மனித இயல்புக்குரிய, புலனுணர்ச்சியின்பங்களில் தோய்ந்த, சிற்றின்பம் சார்ந்த, உலகியல் பற்றுடைய, தெய்வத்தன்மையில்லாத, மேலுகப் பற்றற்ற, ஆன்மிகமல்லாத.
Flesh-pot
n. இறைச்சி சமைக்கப்படும் கலம், இறைச்சிவளம், இன்பநிறை உயிர்வாழ்க்கை.
Flesh-wound
n. எலும்பு அல்லது உயிர்நிலையான உறுப்பை எட்டாத காயம்.
Fleshy
a. கொழும்புள்ள, தசைப்பற்றுள்ள, கொழுத்த, உருண்டு திரண்ட, பருமனான, சதைசார்ந்த, எலும்பில்லாத, பழவகையில் சதைப்பற்றுள்ள, சதைபோன்ற.
Fleur-de-lis
n. பகட்டான மலர்வகை, கட்டிய மரபில் அல்லிமலர், பிரான்சு நாட்டரசரின் அரசுச்சின்னம், பிரான்சு நாட்டின் அரசகுடும்பம், பிரான்சு.
Fleuret
n. சிறுமலர் போன்ற அணிகலன்.
Fleuron
n. மலர்வடிவமான சிற்ப அணியொப்பனை.
Fleury
a. (க.க.) பகட்டான அல்லிமலர் வகையினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Flew, v. fly
என்பதன் இறந்தகாலம்.
Flews
n. pl. வேட்டைநாய் முதலியவற்றின் தொங்குதாடைகள்.
Flex
n. மின்விளக்குப் போடுவதில் பயன்படுத்தப்படும் காப்பிட்ட துவள் கம்பி, (வினை) வளையச்செய், உறுப்புக்களை வளை. பாறைகளை மடியச்செய்.