English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fossil
n. (மண்.) புதைவடிவம், மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம், பழமைப்பட்டவர், காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர், வழக்கில்லாப் பழம்பொருள், (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள, பழமைப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள, மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற.
Fossiliferous
a. புதைபடிவங்கள் கொண்ட.
Fossilize
v. புதைபடிவமாக்கு, புதைபடிவமாகு.
Fossorial
a. (வில.) வளைதோண்டுகிற, வளைதோண்டுதற்குப் பயன்படுத்தப்படுகிற.
Foster
v. அன்பாக வளர், ஊட்டிவளர், சீராட்டு, நெஞ்சில் அணைத்தாதரித்துப் பேணு, வளர்ச்சிக்குத் துணைசெய், ஆதரித்து இடமளி, மனத்தில் வைத்துப்பேணு, சாதகமாயுதவு, அனுகூலமாயுதவு.
Fosterage
n. ஊட்டி வளர்த்தல், செவிலித்தாயர்களை அமர்த்தும் வழக்காறு.
Foster-brother
n. வேறு பெற்றோர்களுக்குப் பிறந்து உடன் வளர்க்கப்பட்ட ஆண்குழந்தை.
Foster-child
n. வளர்ப்புக் குழந்தை.
Foster-father
n. வளர்ப்புத்தந்தை.
Fosterling
n. வளர்ப்புக்குழந்தை.
Foster-mother
n. செவிலித்தாய், வளர்ப்புத்தாய், கோழிக்குஞ்சுகளை முட்டைபொரித்து வளர்ப்பதற்கான கருவி.
Foster-sister
n. வேறு பெற்றோர்களுக்குப் பிறந்து உடன் வளர்க்கப்பட்ட பெண்குழந்தை.
Fougade, fougasse
(படை.)கற்கள் செறிக்கப்பெற்றுள்ள சிறு சுரங்கவெடி.
Fought, v. flight
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Foul
n. வெறுக்கத்தக்க செய்தி, தீமை, மோதல், முறை தவறிய ஆட்டம், (பெ.) அருவருக்கத்தக்க, புலன்களுக்கு வெறுப்புத்தருகிற, கடுவெறுப்பூட்டுகிற, உருக்குலைவான, முடைமநாற்றம் வாய்ந்த, துப்புரவு கெட்ட, காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட, அழுக்கடைந்த, கறைபடிந்த, சேறார்ந்த, குப்பையடைந்த, வண்டலார்ந்த, கப்பலடி, வகையில் சிப்பிகூளமடைந்த, அடைப்புண்ட, சிக்கலான, முடிச்சுவகையில் தாறுமாறான, புயலார்ந்த, மழைமலிந்த, ஓயாத்தூறலான, கேடார்ந்த, பாதகமான, மிக மோசமான, வெட்கக்கேடான, கீழ்த்தரமான, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த, கொச்சையான, நேர்மைக்கேடான, ஆட்ட வகையில் முறை, தவறான, மோதலான, பயனற்ற, அற்பமான, (வினை) அழுக்காக்கு, மாசுபடு, கறைபடு, அடைப்புண்டு தடைப்படு, புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு, நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை, சிக்குறு, மோது, குற்றப்படுத்து, இகழ் உண்டுபண்ணு, புகழ் கெடு, (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி, மேல் மோதலாக, நேர்மைக் கேடாக, நம்பிக்கைக்கேடாக.
Foulard
n. நெகிழ்வுடைய மென்மையான பட்டுத்துணிவகை, பட்டுத்துணி வகையினாலான கைக்குட்டை.
Foule
n. பளபளப்பான மேற்பரப்புடைய மெல்லிய கம்பளி ஆடை.
Foully
adv. வெறுப்புண்டாக்கும் வகையில், கொடுமையாக, இரக்கமின்றி, பொருந்தா அவமானத்தோடு.
Foul-mouthed
a. இழிசொற்களையே பேசும் வழக்கமுள்ள.
Foulness
n. அழுக்கற்ற நிலை, அருவருப்பான பொருள், வெறுப்புண்டாக்கும் கொடுமை.