English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Foul-play
n. முறைதவறான ஆட்டம், வாய்மையற்ற செயல், வஞ்சனை, வன்செயல், கொலை.
Found
-2 v. கட்டிடம் முதலியவை வகையில் அடிப்படையிடு, நிறுவுதல் செய், ஏற்படுத்து, நிறுவு, தோற்றுவி, தொடங்கிவை, கட்டு, அடிப்படைமிதமை, ஆதாரமாகக்கொள்.
Found
-3 v. உலோகம்-கண்ணாடி ஆகியவற்றை உருக்கி வார்ததல் செய், வார்ப்பு உருவஞ் செய்.
Found(1), v. find
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Foundation
n. நிறுவுதல், நிதியேற்பாட்டு நிறுவனம், நிதியேற்பாட்டு நிறுவனத்தின் வருமானம், கடைக்கால், அடிப்படை, அஸ்திவாரம், ஆதாரம், அடித்தளம், அடிப்படை அமைப்பு, மூலதத்துவம், அடிப்படைக் கோட்பாடு, பின்னல் வேலையில் பின்னணித்தையல்.
Foundationer
n. நிறுவனத்தின் நிதிகளிலிருந்து ஆதரிக்கப்பெறுபவர்.
Foundation-muslin, foundation-net
n. உடுப்புகளையும் பெண்டிர் அணியுங் குல்லாய்களையும் விறைப்பாக்குவதற்காகப் பசையிட்டு ஒட்டவைத்த துணிவகைகள்.
Foundation-school
n. நிதியேற்பாட்டுத் திட்ட உதவி மீதமைந்த பள்ளி.
Foundation-stone
n. கடைக்கால், அடிக்கல்.
Founder
-1 n. நிறுவுபவர், அமைப்பவர், தோற்றுவிப்பவர், அறக்கொடை அளிப்பவர்.
Founder
-2 n. உருக்கி உருவாக்குபவர், வார்ப்புவேலை செய்பவர்.
Founder
-3 n. தகர்வு, மட்டுமீறிய வேலையினால் குதிரைக்காலில் காணும் வீக்கம், குதிரைகளின் மார்புத்தசைப்பற்றுக்களில் வாதநோவு, (வினை) நிலவகையில் உள்ளிழு, கீழிருந்துவிடு, அமர்ந்து அமிழ்ந்துவிடு, கட்டிட வகையில் இடிவுறு, தகர்வுறு, இடிந்துவிழு, குதிரைவகையில் வலுவிழந்து வீ
Foundling
n. எடுப்புப் பிள்ளை, கேட்பாரற்றுக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை.
Foundry
வார்ப்பகம், வார்ப்படச் சாலை
Foundry
n. வார்ப்புக்கலை, வார்ப்படக்களம், வார்ப்படச் சாலை.
Fount
-1 n. (செய்.) ஊற்று, மூலம், ஆதாரம், விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம், ஊற்றுப்பேனாவின் மைகொள் பகுதி.
Fount
-2 n. அச்செழுத்துப்பந்தி, முகப்பிலும் அளவிலும் ஒரு சீரான அச்சுருப்படிவங்களின் தொகுதி.
Fountain
n. நீர் ஊற்று, ஆறு முதலியவற்றின் மூலம், பீறிட்டடிக்கும்படி செய்யும் நீர்த்தாரை, தாரை நீருற்றுக்கான அழகிய கட்டுக்கோப்பு, பொதுக் குடிதண்ணீர் ஊற்று, விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம், அச்சகங்களில் மை வழங்கும் கொள்கலம்.