English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Four-poster
n. நான்கு திரைக்கம்பங்களையுடைய பெரிய கட்டில், நான்கு பாய்மரங்களையுடைய கப்பல்.
Four-pounder
n. நான்கு கல் எடையுள்ள குண்டெறியும் பீரங்கி, நான்கு கல் எடையுள்ள அப்பம்.
Fours
n. pl. படைத்துறையில் நான்கு வரிசைகொண்ட அணிவகுப்பு, நான்கு மணிக்குக் கொள்ளப்படும் சிற்றுண்டி, நான்கு முனைக்கோடிகள், நான்கு துடுப்புடைய படகின்பந்தயம்.
Fourscore
n. எண்பது, (பெ.) எண்பது வயதான.
Foursome
n. நால்வர்கொண்ட தொகுதி, பக்கத்துக்கு இருவராக நால்வர் ஈடுபடும் குழிப்பந்தாட்டம், (பெ.) நான்கு கொண்ட, நால்வர் பங்குபெறவேண்டிய.
Foursquare
a. சதுரவடிவுள்ள, திண்ணமாகவும் உறுதியாகவும் நிலைபெற்ற.
Fourteen
n. பதினான்கு, (பெ.) பதினான்கான.
Fourteener
n. பதினாக்கு அசைகளுள்ள செய்யுள் வரி.
Fourteenth
n. பதினான்கிலொன்று, (பெ.) பதினான்காவதான, பதினான்கு சம பாகங்களில் ஒன்றுக்கச் சமமான.
Fourth
n. கால், நான்கு சம பாகங்களில் ஒன்று, மாதத்தின் நான்காம் நாள், (பெ.) நான்காவதான, நான்கு சம கூறுகளில் ஒன்றுக்குச் சமமான.
Fourthly
adv. நான்காவதாக, நான்காமிடத்தில்.
Fourths
n. pl. நான்காந்தரப்பொருள்கள்.
Four-wheeler
n. நான்கு சக்கர வண்டி.
Fowl
n. கோழி, கோழிக்கறி, பறவை, (வினை) காட்டுக்கோழியைவேட்டையாடு, காட்டுக்கோழிமீது வேட்டிடு, காட்டுக்கோழியைக் கண்ணியிற்படுத்து, காட்டுக்கோழியைப்பிடி.
Fowler
n. காட்டுக்கோழி பிடிப்பவர்.
Fowling-net
n. பறவைகளைப் பிடிப்பதற்கான வலை.
Fowling-piece
n. காட்டுக்கோழி வேட்டையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி வகை.
Fox
n. சூழ்ச்சிக்காரன், நரி, கபடி, வடக்கு விண்மீன் குழுவினுள் ஒன்று, (வினை) தந்திரமாகச் செயலாற்று, கபடம் பண்ணு, ஏமாற்று, சுவடிப்பக்கங்கள் முதலியவற்றில் சாம்பல் நிறப்புள்ளிகளிட்டு நிறத்தோற்றமாற்று.
Fox-brush
n. நரியின் வால்.