English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fracture
n. உடைவு, முறிவு, எலும்புமுறிவு, கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி, அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல், (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர், (வினை) முறிவு உண்டாக்கு, தொடர்ச்சியிகெடு. பிள, வெடிப்புறு.
Fraenum
n. (உள்., வில) உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறு நரம்பு.
Fragile
a. எளிதில் முறிகிற, எளிதில் உடைகிற, அழியத்தக்க, வலுவற்ற, வலுக்கேடான கட்டமைப்புடைய.
Fragility
n. எளிதில் உடையும் நிலை, வலுவற்ற இயல்பு.
Fragment
n. முறிந்த துண்டு, பிரிந்து வந்து விட்ட துணுக்கு, முழுமையற்ற கூறு, மீந்த பகுதி, எச்சக்கூறு, முடியாத பகுதி, அரைகுறையாக விடப்பட்ட பகுதி.
Fragmental
a. பழம் பாறையின் துணுக்குகள் கொண்ட, துண்டுகளாயுள்ள.
Fragmentary
a. துண்டுத்துணுக்குகள் கொண்ட, முறிந்து போன, உடைந்த.
Fragmentation
n. சிறு கூறுகளாகப் பிரித்தல், கூறுபாடு, உயிரணுக் கூறுபாட்டுக்குரிய படிவளர்ச்சிகளில்லாமலே பிரிவுறுதல்.
Fragrance, fragrancy
நறுமணம், இனிமைத்திறம்.
Frail
-1 n. அத்திப்பழம்-உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் முதலியவற்றைச் சிப்பங் கட்டுவதற்குரிய நாணற்புல்லினால் செய்யப்பட்ட கூடை, நாணற் புல்.
Frail
-2 a. எளிதில் உடைகிற, நொய்தான, நிலையற்ற, நிலையாத் தன்மையுடைய, நலிந்த, உடல்நலிவுடைய, ஒழுக்க உறுதியற்ற, அவாமருட்சி அடக்கும் ஆற்றலில்லாத, பெண்கள் வகையில் கற்பொழுக்கமற்ற.
Frailness, frailty
தவறிழைக்கும் பாங்கு,அவாமருட்சிக்குட் படுமியல்பு, குறைபாடு, இழுக்கம், வலுமின்மை, நொய்ம்மை, நலிவு.
Frais
-2 n. வட்டத்தொளையைப் பெரிதாக்குவதற்கான கருவி, கடிகாரச் சக்கரங்களில் பற்கள் வெட்டுவதற்கான கருவி, 16-ஆம் நுற்றாண்டைய கழுத்தணி வகை.
Fraise
-1 n. கோட்டையமைப்பு வகையில் மதிலின் பிதுக்கத்தைச் சுற்றியுள்ள கிடையான கம்பிவேலி, (வினை) மதிற்பிதுக்கஞ் சுற்றிக் கம்பிவேலியிட்டு அடை.
Framboesia
n. நீகிரோவர்கள் இனத்திடையே நிகழும் தோல்சார்ந்த தொற்றுக் கொள்ளைநோய் வகை.
Frame
n. கட்டுமானம், அமைப்பு, கட்டமைதி, நிலவர ஒழுங்குமுறைச் சட்டம், அடிப்படைத் திட்டம், முறைமை, மனத்தின் தற்கால நிலை, கட்டமைந்த உரு, உடலமைப்பு, உறுப்பிணைவமைதி, என்புச்சட்டம், இணைவரிக்கூடு, கட்டிட உருவரைச் சட்டம், உள்ளுறைச் சட்டம், அடிப்படைச்சட்டம், ஆதார அடிப்படை, புறவரிச்சட்டம், சித்திரவேலைத் துணை வரிச்சட்டம், துன்னல் வேலைப் பொறிச்சட்டம், செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம், சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை, ஆட்டவகை, ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம், அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி, திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம், தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி, (வினை) பொருத்து, இணைத்தமை, வகுத்தமை, கலந்து உருவாக்கு, திட்டமிட்டு இயற்று, ஒலி உருப்படுத்து, இயக்கு, நடத்து, சட்டமிடு, சட்டத்தில் அமை, சட்டத்துக்கு உட்படுத்தி அமை, பொறிச்சட்டத்தில் மாட்டுவி, வழிவகுத்துச்செல், நாடிச்செல், இடம்பெயர்வுறு, முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு, சூழ்ந்துருவாக்கு, திறங்கொண்டியற்று, புனைந்துருவாக்கு, பாவனைசெய்.
Frame works
படச்சட்டப் பணிமனை, படச்சட்டக் கடை
Frame-house
n. பலகைகளிட்டு அடைக்கத்தக்க மரச் சட்டங்களால் அமைந்த வீடு.
Frame-maker
n. படச்சட்டங்கள் செய்பவர்.