English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Frankfurt, frankfurter
n. செர்மனியில் முனைத்த காரச்சுவையூட்டப்பட்ட இறைச்சி உணவு வகை.
Frankincense
n. சாம்பிராணி, குங்கிலியம்.
Franklin
n. சிறு நிலக்கிழார், 14, 15-ஆம் நுற்றாண்டு களிற் பண்ணை நிலைக்குட்படாத சிற தனி உரிமையாளர்.
Frank-pledge
n. முற்கால வரிக்கடமையில் பத்துக் குடும்பப் குழுவினர்கள் ஏற்றிருந்த கூட்டுப்பொறுப்பு.
Frantic
a. மூர்க்க வெறிகொண்ட, சினங்கொண்டு தன்னை மறந்த, வெறிபிடித்த, துயராற் கொதித்தெழுந்த, கட்டு மீறிய.
Frap
v. (கப்.) இறுக்கிக்கட்டு.
Frappe
a. (பிர.) இன்தேறல் வகையில் பனிக்கட்டியினால் குளிரவைக்கப்பட்ட.
Frass
n. முட்டைப்புழுக்களின் எச்சம், துளைக்கும் பூச்சியினங்களின் எச்சம்.
Frater
-1 n. உணவுக்கூடம்.
Frater
-2 n. துறவி, தோழன், கூட்டாளி.
Fraternal
a. உடன்பிறப்பாளர் சார்ந்த, உடன்பிறப்பாளர்கள் போன்ற, உடன்பிறந்தாரின் இயல்புக்கு உகந்த.
Fraternity
n. தோழமை, உடன்பிறப்பாண்மை, உடன் பிறப்பாளர் பாங்கு, உடன்பிறப்பாளர் நிலை, கல்லுரி அல்லது பல்கலைக்கழக மாணவர் கழகம், திருச்சபை, வாணிகக் கூட்டுக்குழு, பொதுநோக்கங்கள் கொண்டவர்களின் கழகம், ஒரே இனத்தவர்கள் அல்லது வகையினர்களின் ஈட்டம்.
Fraternization
n. உடன் பிறப்பாளர்களைப்போன்று அளவளாவுதல்.
Fraternize
v. தோழமைகொள், நெருங்கி அளவளாவு.
Fratricide
n. உடன்பிறப்புக்கொலை.
Frau
n. (செர்.) செர்மன் மொழி வழக்கில் பெண், திருவாட்டி.
Fraud
n. (சட்.) ஏமாற்றுக் குற்றம், ஏய்ப்பு, மோசடி, வஞ்சச் சூழ்ச்சி, ஏமாற்றுப் பொறி, போலியான பொருள், போலியானவர்.
Fraudulent
a. வஞ்சனைக்குரிய, ஏய்க்கும் இயல்புடைய, ஏமாற்றும் பழக்கமுடைய, மோசடியால் விளைந்த.
Fraught
n. சுமை, மூடை, கப்பற்சரக்கு, (பெ.) சுமையேற்றப்பட்ட, நிரப்பப்பட்ட, ஆர்ந்த, நிரம்பிய, செறிந்த, இடருக்கு வழிவகுக்கிற, மூலகாரணமான, பின்விளைவாகவுடைய, பின் விளைவுபற்றி முனைப்பாக அச்சந்தருகிற, (வினை) நிரப்பு, செறித்துவை.