English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Free-handed
a. தாராளமான, வண்மையுடைய.
Freehold
n. இறையிலி நிலம்.
Freeholder
n. இறையிலி மானியத்தார்.
Freelance
n. கடடுப்பாடற்ற போர்வீரர், கட்டற்றவர், எப்பத்திரிகையையும் சாராத பொது எழுத்தாளர், சார்பற்ற அரசியல் வாதி, பணிமுதல்வரற்ற தன்னிச்சையான தொழிலாளி.
Free-liver
n. தடங்கலின்றி உணவு குடியின்பங்களில் தோய்பவர்.
Free-love
n. திருமணக் கட்டுப்பாடற்ற காதல் தொடர்பு, குடும்பப்பொறுப்புக் கடப்பாடற்ற காதல் வாழ்வு.
Freely
adv. கடடின்றி தன்னுரிமையாக, தாராளமாக, இலவசமாக, (கப்.) காற்றுப்பக்கமாகப் பாய்களை மிகுதியாய் இழுக்காமல்.
Freeman
n. கட்டற்ற சுதந்திர மனிதர், அடிமை வாழ்வற்றவர், குடியுரிமையுள்ளவர், கழகத் தனியுரிமை உறுப்பினர், நகரத் தனியுரிமை உறுப்பினர்.
Freemartin
n. முதிராப் பெண்மை உறுப்புடைய ஆண்கன்று, சேங்கன்றுடன் இரட்டையாகப் பிறந்து புறப்பெண்மைமயுறுப்புடன் முனைப்பான ஆண் கூறுடைய பெண் விலங்கு.
Freemason
n. மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழகத்தின் உறுப்பினர்.
Freemasonry
n. மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு, கூட்டுரிமைக் கழக நிறுவனம், ஒத்த பண்புடையாரின் இயலார்ந்த கூட்டுறவு.
Freeminded
a. கவலையற்ற மனமுடைய.
Free-port
n. சுங்கமற்ற துறைமுகம்.
Freesia
n. தென் ஆப்பிரிக்காவிலுள்ள பகட்டான மலர்களையும் குமிழ் வடிவான தண்டையுமுடைய செடிவகை.
Free-spoken
a. கருத்து மறைப்பில்லாமல் பேசும் இயல்புடைய, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத.
Freestone
n. மாக்கல், பாளம் பாளமாகப் பிளவுறாத வாள் அறுப்பு வேலைப்பாட்டுக்குரிய கல்வகை, (பெ.) உள்ளீடு எளிதில் பிரியும் இயல்புள்ள கொட்டையுடைய.
Freethinker
n. கட்டற்ற பகுத்தறிவாளர், சமய மூட நம்பிக்கைச் சார்புகளற்ற தற்சிந்தனையாளர்.
Free-thinking, free-thought
n. கட்டற்ற பகுத்தறிவுச் சிந்தனை, சமய மூடநம்பிக்கைச் சார்பற்ற அறிவாராய்வு.
Free-trade
n. தங்குதடயற்ற வாணிகம், சுங்கப் பாதுகாப்பு முறைக் கட்டுப்பாடில்லா வாணிகம்.
Free-trader
n. தங்கு தடையற்ற வாணிகத்தில் நம்பிக்கையுடையவர், தடையற்ற வாணிகமுறைக் கோட்பாடு பரப்புபவர், தடையற்ற வாணிகம் செய்பவர், கள்ள வாணிகர், சுங்கக் கட்டுப்பாட்டை மீறி வாணிகம் செய்பவர், கள்ள வாணிகக் கப்பல்.