English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Freeze
n. பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம், பணி உறைபருவ வருகை, கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு, (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய், உறை, பனிக்கட்டியாகு, பனிக்கட்டியால் மூடப்பெறு, பனிக்கட்டியாக மாறு, குளிரால் இறுகச்செய், குளிரால் இறுகு, குளிரால் விறைப்பாகு, பனிக்கட்டியால் இறுகு, உறைதட்ப நிலையிலிரு, அச்சத்தால் நடுக்குறுத்து, ஊக்கங்கெடச் செய், கிளர்ச்சி ஒடுக்கு, செயலறச்செய், இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை, விலையை ஒருநிலைப்படுத்து, ஊதியத்தை நிலவரப்படுத்து.
Freeze-out
n. முதலிழந்த உடனே ஒவ்வொரு ஆட்டக்காரராக விலகிவிடும் சீட்டாட்ட வகை.
Freezer
n. உறையவகும் துணைக்கருவித்தொகுதி, உறையும் பொருள்.
Freezing
a. மிகு குளிரான, ஊக்கம் கெடுக்கிற, ஆர்வக் குறைவான, நெருங்கிப்பழகாத, விலகிநடக்கிற.
Freezing-mixture
n. பொருள்களை உறையும் படி செய்யும் கலவை.
Freezing-point
n. உறைநிலை, பொருள்களின் உறைதட்பநிலை.
Freight
n. சுமை, கப்பற்சரக்கு, பாரம், சரக்கேற்றிக்கொண்டு செல்லுதல், சரக்கேற்றிக்கொண்டு செல்லுதற்காகக் கப்பலை வாடகைக்கு அமர்த்துதல், (வினை) கப்பலிற் சரக்கை ஏற்று, சரக்கு களையும் பிரயாணிகளையும் ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடு, சரக்குகளையும் ஆட்களையும் ஏற்றிச் செல்லுவதற்காக வாடகைக்கு விடு.
Freightage
n. கப்பல் சரக்குத் தொகுதி, கப்பலிற் சரக்கேற்றிச் செல்லுவதற்கான கட்டணம், கப்பலில் சரக்கேற்றுதல், சரக்கேற்றிச் செல்வதற்காகக் கப்பலை வாடகு அமர்த்துதல்.
Freighter
n. கப்பலிற் சரக்கேற்றபவர், சரக்கேற்றதற்காகக் கப்பலை வாடகை ஒப்பந்தம் செய்பவர், உள்நாட்டுக்கு ஏற்றிச்செல்லச் சரக்குகளை வாங்கி அனுப்பும் பொறுப்பேற்பவர், சரக்கேற்றும் கப்பல், சரக்கேற்றிச் செல்லும் விமானம்.
French
n. பிரஞ்சுமொழி, (பெ.) பிரான்சுநாடு சார்ந்த, பிரான்சு நாட்டு மக்களை சார்ந்த, பிரான்சு நாட்டு மக்களின் பண்புளையுடைய.
Frenchify
v. பிரான்சுநாட்டின் மொழி-பண்பு ஆகியவற்றின் உருவங்கொடு, பிரான்சு நாட்டு மக்கள் போலாகு, பிரான்சு நாட்டினர்போல் நட, பிரான்சுநாட்டுப் பாணியூட்டு, பிரான்சுநாட்டுப் பாங்கு மேற்கொள்.
Frenchless
a. பிரஞ்சுமொழி தெரியாத.
Frenchman
n. பிரான்சுநாட்டுக் குடிமகன், பிரான்சு நாட்டிற் பிறந்தவன்.
Frenchwoman
n. பிரான்சு நாட்டுப் பெண்.
Frenchy
n. பிரான்சுநாட்டவரை குறித்த ஏளனக் குறிப்புச் சொல், (பெ.) மிகைப்பட்ட பிரஞ்சு பாணியடைய, பிரஞ்சு பழக்கவழக்கங்களையுடைய.
Frenetic
a. வெறியெழுச்சி கொண்ட, வெறித்த, கொள்கை முனைப்பான.
Frenum
n. உறுப்புகளின் இயக்கத்தைத் தடைசெய்யும் தசைநார்.
Frenzied, a.,
வெறியூட்டப்பட்ட, சீற்றங்கொண்ட.
Frenzy
n. வெறி, மூளைக்கோளாறு, தற்காலிகப் பைத்தியம், மிகுசினம், தீவிர ஆத்திரம், சன்னியாலான கிளர்ச்சி, மனம்போன கோக்கான மடமை, தன்னைமறந்த சீற்றம், கொந்தளிப்பு, (வினை) வெறியூட்டு, மிகுசினமூட்டு.
Frequency
n. அடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண்.