English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Freudian
n. சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் உளப்பாங்காராய்ச்சிக் கொள்கைகளைப் பின் பற்றுபவர்.
Friable
a. எளிதில் தகர்ந்து விழக்கூடிய.
Friar
n. சமயத்தொண்டிலீடுபட்ட மடத்துத் துறவி.
Fribble
n. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், (வினை) சிறு பிள்ளைத்தனமாக நட, விளையாட்டுத் தனமாயிரு.
Fricandeau
n. பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட குழம்போடு கூடிய இறைச்சித்துண்டு, கன்றின் இறைச்சி, (வினை) பொரிக்கப்பட்ட அல்லது வதக்கப்பட்ட இறைச்சித்துண்டுகளாக்கு.
Fricassee
n. பறவையின் அல்லது சிறு விலங்கின் சுவையூட்டப்பட்டுப் பொரித்த இறைச்சி, (வினை) அரிந்து பொரித்த இறைச்சியாக்கு.
Fricative
n. உராய்வொலி, உராய்வு மெய்யெழுத்து, நெருக்கமான சந்துவழியாக மூச்சின் அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகும் மெய்யெழுத்து, (பெ.) உராய்வதால் உண்டாகிற.
Friction
n. தேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு.
Friction-ball
n. சக்கர உராய்தலைக் குறைக்கும் உட்கோளத்திரளமைப்பு.
Fried, v. fry
-2 என்பதன் இறந்தகாலம்.
Friend
n. நண்பர், அன்பர், துணைவர், ஒருதுறைத் தோழர், பழக்கமிகுந்தவர், நலஞ்செய்பவர், செல்வாக்கு ஆதரவு தருபவர், உற்றுழி உதவுபவர், நல்லெண்ணமுடையவர், நண்பர்கழக உறுப்பினர், மான ஈட்டு போரில் ஈடுபாடுபவரின் துணை ஆதரவாளர், பின்பற்றுவோர், கட்சியாளர், சார்வாளர், எதிரியல்லாதவர், எதிர்க்கட்சியல்லாதவர், நேர மனப்பான்மையுடன் பழகுபவர்.
Friendly
n. நட்புரிமையுடைய பழங்குடியினர், (பெ.) நட்புரிமையுடைய, நண்பராகச் செயலாற்றுகிற, நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய, நண்பருக்குகந்த, அன்பு காட்டுகிற, ஆர்வம் வௌதப்படுத்துகிற, அன்பினால் தூண்டப்பட்ட, பகைமையற்ற, நேசமான, அன்புக்கனிவான, சார்வாதரவாக, ஏற்குமார்வமுள்ள, உதவும் ஆர்வமுள்ள, பயனளிக்கக்கூடிய, வாய்ப்பான, கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய, உற்றுழி உதவுகிற.
Friends
n. pl. அணுக்க உறவினர், பொறுப்பான உறவினர்.
Friendship
n. நட்பு, நண்பராயிருக்கும் நிலை, நட்புறவு, அற்புச் செயல், அன்பான இயல்பு, தோழமை.
Friesian
n. ஆலந்து நாட்டிலுள்ள பிரீஸ்லாந்து பகுதிக்குரிய கால்நடை வகை, பிரீஸ்லாந்து நாட்டுக் கால் நடைகளில் ஒன்று, (பெ.) பிரீஸ்லாந்து நாட்டுக் கால்நடையைச் சார்ந்த.
Frieze
-1 n. ஒருபக்கத்தில் மட்டும் மழமழப்பாக இடையிழை கத்தரிக்கப்பட்ட சொரசொரப்பான கம்பளித்துணி வகை.
Frieze
-2 n. கட்டிடத்தில் தூணுக்கு மேலுள்ள பகுதியின் உறுப்பு, தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம், ஒப்பனைப்பட்டை.
Frigate
n. ஒருவரிசைப் பீரங்கியுடைய நேர்த்தளப் போர்க் கப்பல், சிறுபோர்வேவுக்கலம், சிறு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல், 2க்ஷ் முதல் 60 பீரங்கிகள் வரையுள்ள முற்காலப் போர்க்கப்பல் வகை, வேகப் போர்க்கப்பல் வகை, வெப்ப மண்டலப் பெரும் பறவை வகை.