English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fright
n. திகில், கிலி, திடீரச்சம், பேரச்சம், இயல்பு மீறிய கோர உருவினர், (வினை) (செய்.) அச்சுறுத்து, திகிலுண்டாக்கு.
Frighten
v. அச்சுறுத்து, திகிலடையச்செய், கிலியுண்டாக்கு, அச்சுறுத்தித் துரத்து, வழக்கமாக அச்சமடையச் செய்.
Frightful
a. அச்சம் தருகிற, அச்சுறுத்துகின்ற, கிலியூட்டுகிற, பெருந்திகில் உண்டாக்குகிற, திடுக்கிடச் செய்கிற, வெறுப்பான, அருவருக்கத்தக்க, அழகில்லாத, கோரமான.
Frigid
a. கடுங்குளிரான, தணுப்புமிக்க, குளிரால் உறைந்த, விறைப்பான, ஆர்வமற்ற, உணர்ச்சியுள்ள, அசட்டை மனப்பான்மையுடைய, கற்பனையற்ற, உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத, மரபு வரம்புக்குட்பட்ட, வினைமுறைச் சட்டப்படி நடக்கிற, இயல்பான கனிவு இல்லாத, கவர்ச்சியற்ற, உவர்ப்பான, சப்பென்ற, பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Frigidaire
n. குளிர்சேமப் பேழை.
Frigidardium
n. பண்டை ரோமாபுரியினரின் குளிர்நீர்க் குளிப்பு வாய்ப்புடைய குளிர்காப்புக்கூடம், குளிர்காப்பறை, தணிப்பு நிலையில் வைத்துப் பேணப்படும் அறை.
Frigidity
n. உறைகுளிர், மந்தகுணம், கிளர்ச்சியின்மை.
Frill
n. தொங்கலிழை, ஓரப்பின்னற் குஞ்சம், தாள்புணைபூவிழை, மயிர்முடியின் நுனி, இறகுநுனி, செடிகளின் நுனியிழைக்கொத்து, உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி, நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு, (வினை) ஓரத்தொங்கல் அமை, குஞ்சம் பின்னு, நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.
Frills
n. pl. செயற்கை அணிமணி., பகட்டுநடை, வெற்றாரவாரம்.
Fringe
n. ஓரம், புற எல்லை, விளிம்பு, நுல் தொங்கல், இழை விளிம்பு, ஓர இழைவரிசை, ஓரப்பட்டை, கரை, தனிக்கரையிணைத்த ஓரம், சுற்றுக்குடுமி, நெற்றிமீது கவிந்து நிற்கும் விளிம்புக் குறுமயிர் வரிசை, உயிரினங்களின் உறுப்போர மயிர்க்கற்றை, செடியினங்களின் உறுப்புக்கொடிகளிலுள்ள இழைக்கற்றை, முற்றிலும் மழித்து ஓரத்தில் மட்டும் வளர விடப்படும் தாடி, (வினை) ஓரத்தை குஞ்சங்களினால் அணி செய், ஓரக்கரை அமை,நுல் தொங்கல் இழை, சுற்றிலும் ஓரம் கட்டு, ஓரப்பட்டை இணை, ஓரமாய் அமைவுறு.
Frippery
n. வீண்பகட்டணிமணி, வெற்றாரவார அணிநடை, பயனற்ற பொருள்கள், சிறுதிறக் குவை, (பெ.)பயனற்ற, சிறுமைப்பட்ட.
Frisette
n. (பிர.) நெற்றியின் மீது சிறு செயற்கைச் சுருள்களுள்ள பட்டை.
Friseur
n. (பிர.) முடிதிருத்துபவர்.
Frisian
n. பிரீஸ்லாந்து நாட்டுக்குடிமகன், பிரீஸ்லாந்துநாட்டு மொழி, (பெ.) பிரீஸ்லாந்தைச் சார்ந்த.
Frisk
n. துள்ளிக்குதித்தல், குதியாட்டம், (வினை) குதி, குதித்து விளையாடு, குதித்து மகிழ், துள்ளு.
Frisket
n. அச்சுத்துறையில் தாள் நிலைத்திருக்க உதவும் குறுக்குப்பட்டைகள் வாய்ந்த மெல்லிய இரும்புச்சட்டம்.
Frit
n. கண்ணாடி செய்வதற்குரிய மணலும் சுண்ணமுமுள்ள நீரியற் கலவை, மென்மையான பீங்கான் செய்யும் பளிங்கு போன்ற கலவைப்பொருள், (வினை) கண்ணாடி செய்வதற்குரிய கலவைப்பொருளாக்கு, பீங்கான் செய்வதற்குரிய கலவையாக்கு, அரைகுறையாக உருகச்செய், நீரியற் கலவையாக்கு.
Fritfly
n. கோதுமைப்பயிரை அழிக்கிற சிறு ஈ வகை.
Frith
n. கடற் கூம்பு, கழிமுகம்.
Fritillary
n. அல்லிமலர்ச் செடிவகை, வண்ணத்துப்பூச்சி வகைகள்.