English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Frequent
-1 a. அடுக்கு நிகழ்வான, அடிக்கடி நிகழ்கிற, அடுத்தடுத்து நிகழ்கிற, பொது நிகழ்ச்சியான, பொதுநிலையான, வழக்கமான, அடுத்தடுத்துக் காணப்படுகிற, திரளான, கூட்டமான.
Frequent
-2 v. அடிக்கடி செல், அடுத்தடுத்துச் செல், வழக்கமாகச் செல், சென்றுபழகு.
Frequentation
n. அடிக்கடி செல்லுதல், அடுத்தடுத்துச் சென்று காணுதல்.
Frequentative
n. (இலக்.) திரும்பத்திரும்ப நிகழ்தலைக்கூறும் வினை, (பெ.) திரும்பத்திரும்ப நிகழ்தலைகூறுகிற, செயலின் முனைப்பான செறிவைக் குறிக்கிற.
Fresco
n. சுவர்கோல ஓவியம், மேல்மண்டப ஓவியம், (வினை) சுவர் ஓவியம் வரை, மேல்மண்டப ஓவியம் தீட்டு.
Fresh
n. ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம், நாளின் கிளர்ச்சி தரும்வேளை, வௌளம், புதுப்புனல், (பெ.) புதிய, புதுமை குன்றாத, வாடாத, புதுமலர்ச்சி வாய்ந்த, மங்காத, புதுப்பகட்டான, நன்னிலையிலுள்ள, கெடாத, ஊசாத, சோர்வற்ற, இளமை நலமுடைய, வாட்டமுறாத, உடல்நலம் குன்றாத, ஊக்கம் குன்றாத, புதுக்கிளர்ச்சி வாய்ந்த, பயன்படுத்தப்படாத, கைபடாத, கலப்பற்ற, தூய, மாசுபடாத, துப்புரவான, நீர்வகையில் குடிக்கத்தக்க, பழுதுபடாத, பழகிவிடாத, நாட்படாத, புதிதாகச் செயல் தீர்ந்த, தகுதிகெடாத, கிளர்ச்சியூட்டுகிற, சோர்வகற்றுகிற, சில்லென்ற, அயர்ச்சி போக்குகிற, ஊக்கம் கெடாத, முன் உணரப்படாத, பழகாத, அறியப்படாத, புத்தம்புதிய, மீண்டும் புதுத்தொடக்கமான, புதுநிலையான, சமைக்கப்படாத, பக்குவப்படுத்தப்படாத, பதனிட்டதல்லாத, பச்சைநிலையில உள்ள, முதிராத, அனுபவமற்ற, பழக்கமற்ற, செயல் முனைப்பான, துடுக்குத்தனமிக்க, காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள, நாணங்கெட்ட.
Fresh-blown
a. அன்றலர்ந்த, புதிதாக மலர்ந்த.
Freshen
v. புதிதாக்கு, உவர்ப்பை நீக்கு, புதுவளர்ச்சி பெறு.
Fresher
n. பல்கலைக்கழக முதல் ஆண்டு மாணவர்.
Freshet
n. புதுப்புனல் வௌளம், புதுநீர்ப் பெருக்கு, நன்னீர் ஓடை, கடலினுள் நன்னீர் ஒழுக்கு.
Freshly
adv. புதிதாக, மீண்டும் தொடக்க முதலாக, புத்தம் புதிய நிலையில்.
Freshman
n. பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டு மாணவர், புதிதாக வந்தவர்.
Fresh-run
a. ஆற்றின் தலைமுதலிற் சென்று முட்டையிடும் இயல்புடைய மீன்வகையில் புதிதாகக் கடலிலிருந்து வந்த.
Fresh-water
a. நன்னீர் சார்ந்த, உப்பற்ற நீர் சார்ந்த, நன்னீர்ப் பரப்பில் செல்லும் பழக்கமுடைய, பக்குவப்படாத, அனுபவமற்ற.
Fret
-1 n. பின்னற் பூவேலை, அரிவரிச் சித்திர வேலைப்பாடு, நேர்வரைச் செங்கோணத் தொடர்புக்கோலமான அறுப்பு வேலைப்பாடு, (வினை) பின்னற் பூவேலை ஒப்பனை செய், குறுக்கு நெடுக்கு வரைகளாற் பல்வண்ணப்படுத்து, மச்சின் அடிப்பகுதியை உள் அறப்பு அல்லது புடையறுப்பு வேலையால் அணிசெய்.
Fret
-2 n. அரிப்பு, அரிக்கப்பட்ட பகுதி, நீர்ப்பரப்பின் திரை அலைவு, மனப்புகைச்சல், மனக்கரிப்பு, எரிச்சல், கவலை, தொந்தரை, கடுப்பு, சிடுசிடுப்பு, அலைக்கழிவு, அலட்டிப்பு, (வினை) அரித்துத் தின், கரம்பு, தேய்த்தழி, உராய், பல்லைக்கறி, நெறுநெறு என்றகடி, மனமாய்ச்சல் உண
Fret
-3 n. நரப்புக்கருவிகளின் விரற்கட்டை.
Fretful
a. சிடுசடுப்பான, வெடுவெடுப்பான.
Fretsaw
n. சித்திர அறுப்பு வேலையில் மென்பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள்.
Fretwork
n. சித்திர அறுப்புவேலை, வலைப்பின்னல் வேலை, மரத்தில் ஊடறுத்துச் செய்யப்பட்ட சித்திர வேலைப்பாடு.