English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fritter
-1 n. காய்கறித் துண்டடங்கிய புழுங்கற் குழம்பு.
Fritter
-2 n. துணுக்கு, (வினை) நுணுக்கக் கூறுகளாக்கு, பணத்தை வீணாகச் செலவுசெய்து விடு, காலத்தை வீணாகக் கழி, ஆற்றலை வீணாக்கிச் செலவுசெய்து விடு, காலத்தை வீணாகக் கழி, ஆற்றலை வீணாக்கிச் சிதறச்செய், பல்வேறுபட்ட செயல்களிற் சிதறலாக ஈடுபட்டுத் தோல்வி காண்.
Fritz
n. செர்மானியரைக் குறிக்கும் சாட்டுபெயர்.
Frivol
v. சிற காரியங்களில் ஈடுபட்டு நேரம் வீணாக்கு, சிறுபிள்ளைத்தனமாயிரு, விளையாட்டாயிரு, மடத்தனமாகப் பணம் வீணாக்கு, காலத்தைப் பயனற்றதாகக் கழி.
Frivolity
n. சிறுமைத்தனம், அற்பம்.
Frivolous
a. அற்பப்பொழுதுபோக்கான, விளையாட்டுத்தனமான, சிறுமைப் பகட்டாரவாரமான, விளையாட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுகிற, வினையில் பாங்கற்ற, மடத்தனமான.
Friz, frizz
-1 n. சுருண்ட நிலை, சுருள் மயிர், சுரிகுழல் வரிசை, சுருள் மயிர்க் கற்றை.
Frizz
-2 v. பொரிக்கும் போது சுஃறென்ற ஒலிசெய்.
Frizzle
-1 n. சுருட்டை முடி, (வினை) முடியைச் சுருள்வி, சுருட்டையாகு.
Frizzle
-2 v. சரசரவென்ற ஓசையுடன் தாளிப்புச் செய், சுஃறென்று பொரிக்கப்பெறு.
Fro
adv. மீண்டும், திரும்பியும்.
Frock
n. அகலக் கைப்பகுதியுடைய பெண்டிர் உடுப்பு, வீட்டிற்குள் அணியப்படும் குழந்தை மேலங்கி, தொழிலாளரின் தளர்த்தியான நீண்ட சட்டை, முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவர் நீண்ட மேற்சட்டை, படைவீரரின் நீண்ட மேற்சட்டை, தளர்த்தியான கைப்பகுதிகளையுடைய நீண்ட மேலங்கி, நீண்ட மேலங்கியணிந்தவர், மடத்துத் துறவி, உட்சட்டை, (வினை) மடத்துத் துறவியாகமுறைப்படி அமர்த்து.
Frock-coat
n. முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவரின் நீண்ட மேற்சட்டை, படைவீரரின் நிண்ட மேற்சட்டை.
Froebelism
n. விளையாட்டு முறையை அடிப்படையாகக் கொண்ட இளஞ் சிறுவர்க்குரிய கல்விப் பயிற்சிமுறை.
Frog
-1 n. தவளை, தொண்டைவீக்கம்.
Frog
-2 n. குதிரைக்காலடி நடுவில் உள்ள கொம்புபோன்ற தன்மையுடைய தொய்வுப்பொருள்.
Frog
-3 n. கத்தி-துப்பாக்கி முதலியவற்றைத் தொங்கவிடுவதற்குரிய அரைக்கச்சை இணைப்பு, படைவீரர் சட்டை மாட்டுவதற்குரிய கொக்கி குமிழ்மாட்டித் தொகுதி.
Frog
-4 n. இருப்புப் பாதைகள் வந்திணையும் இடங்களிலுள்ள பல்வடுக்களை உடைய இருப்புப்பாளம்.
Frog-eater
n. பிரஞ்சுக்காரர்.