English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Framer
n. உருவாக்குபவர், கட்டுபவர், படங்கள் முதலியவற்றிக்குச் சட்டம் போடுபவர்.
Framework
n. பணிச்சட்டம், வரைச்சட்டம்.
Framing
n. கட்டுதல், நிர்மாணித்தல், அமைத்தல், சட்டம், கட்டமைப்பு.
Franc
n. பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம், 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வௌளி நாணயம், பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Franc tireur
n. (பிர.) நிலைமுறையற்ற காலாட்படைவீரர், குரங்குப்போர் முறையில் போரிடுபவர்.
Franchise
n. வாக்குரிமை, வாக்களிக்கும் தகுதி, குடிமை உரிமை, உரிமைக்குழுமத்தின் முழு உறுப்பினர் உரிமை, விலக்குரிமை, தனியுரிமை.
Franciscan
n. தூய திரு. பிரான்சிஸ் என்பவரால் 120ஹீ-இல் நிறுவப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த துறவி, (பெ.) தூய திரு. பிரான்சிஸின் துறவு மடத்தைச் சேர்ந்த, தூய திரு. பிரான்சிஸின் மடத்துத் துறவிகள் சார்ந்த.
Franco-German
n. பிரான்சு நாட்டுக்கும் செர்மனி நாட்டுக்கும் உரியவர், (பெ.) பிரான்சுக்கும் செர்மனிக்கும் உரிய.
Francolin
n. வான்கோழி போன்ற கவுதாரி வகை.
Francomania
n. பிரஞ்சு ஒழுகலாறுகளிற் பேராவல்.
Francophil, francophile
n. பிரான்சின் நண்பர்.
Francophobe
n. பிரான்சையும் பிரஞ்சுத் தொடர்பான வற்றையும் வெறுப்பவர் அல்லது அஞ்சுபவர்.
Frangible
a. எளிதில் உடைந்துவிடுகிற.
Frangipane, frangipani
n. சிவப்பு மல்லிகை வகை, சிவப்பு மல்லிகை வகையிலிருந்து பெறப்படும் நறுமணப்பொருள், வாதுமை கலந்து பாலேடுவகை, வாதுமை கலந்த களி வகை.
Frank
-1 n. கி,பி. 6-ஆம் நுற்றாண்டில் பிரான்சு நாட்டை வென்று பரவிய செர்மானிய இனக் குழுவினருள் ஒருவர், செர்மனியில் பிராங்கோனியா என்ற பகுதியிலுள்ள இனக்கூட்டினைப்புக் குழுவினருள் ஒருவர், கீழ்ந்திசை வழக்கில் பறங்கியர், மேலை ஐரோப்பியர்.
Frank
-2 n. கடிதத்தைச் செலவின்றி அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்து, கட்டணமின்றடிக் கடிதம் அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்துத் தாங்கிய உறை, (வினை) கட்டணமின்றி அனுப்பும் உரிமையின்படி கடித மீது கையெழுத்திடு,கடிதத்தைக் கட்டணமின்றி அனுப்பு, கட்டணமின்றி ஊர்தியில்
Frank
-3 a. நேர்மையான, கபடற்ற, ஔதவு மறைவில்லாத, அஞ்சாமற் பேசுகிற, மனம் விட்டுத் தெரிவிக்கிற, வௌதப்படையான.
Frankenstein
n. தான் படைத்த பொருளால் தனக்கே தொல்லையும் அழிவும் தேடிக்கொள்பவர்.
Frankfort black
n. செப்புத்தகட்டுச் செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் நேர்த்தியான கறுப்பு நிற மை.