English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Garret
n. மச்சில், மோட்டுமச்சு அறை, உச்ச மேன்மாடி அறை.
Garret
-2 v. கரடுமுரடான செங்கல் வேலைப்பாட்டின் வரம்பு விளிம்புகளில் சிறிய கல்துண்டுகளை இடைப்புகுந்து.
Garreted
a. மோட்டு மச்சறைகள் வாய்ந்த, மோட்டு மச்சறையில் தங்குகிற.
Garreteer
n. மச்சில் வாழ்பவர், மோட்டு மச்சறையில் தங்குபவர், கூலியெழுத்தாளர்.
Garrison
n. கோட்டைக் காவற்படை, (வினை) அரண்காவல் செய்யப் படைவீரரை அமர்த்து, காவற் கோட்டைகளாற் பாதுகாப்பு வலுவூட்டு.
Garron
n. சிறு குதிரை, ஸ்காத்லாந்து-அயர்லாந்து ஆகிய நாடுகளிற் பயிற்றி வளர்க்கப்படும் சிறு குதிரை.
Garrotte
n. குரல்வளை நெரிப்புத் தண்டனை, குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை, குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி, குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை, (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று, குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
Garrulity
n. வாயாடித்தனம், வம்பளக்கும் இயல்பு.
Garrulous
a. சளசள வென்று பேசுகிற, மிகுதியாகப் பேசும் இயல்புடைய.
Garter
-1 n. காலுறையைக் கட்டும் இழைக்கச்சை, (வினை) கால் உறையை இழைக்கச்சையினாற் கட்டு.
Garter
-2 n. ஆங்கில அரசின் உயர்தனிச் சிறப்புப்பட்ட அமைப்பின் தலைமைக் கட்டியர்.
Garter-snake
n. நெடுவரியுடைய நஞ்சற்ற வட அமெரிக்க பாம்புவகை, கறுப்புச் சிவப்பு வளையங்களையுடைய தென் ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகைகளில் ஒன்று.
Garter-stitch
n. எளிய முறைத் தையல் வகை, எளிய குறுக்குத் தையல் முறை.
Gas
n. வளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு.
Gas welding
ஆவிப் பற்றவைப்பு
Gas-bag
n. வளிப்பை, வான்கலத்தின் வளிகொள்கலம், வாயாடி.
Gasbracket
n. வளி விளக்குக்கான சுவர்மாட்டி.
Gas-burner
n. வளி அடுப்பு.