English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gas-carbon
n. வளிபடி நிலக்கரி, நிலக்கரிவளிக்குடுவையில் படியும் கெட்டியான அடர்த்தியுள்ள கரியம், கரியப்படிவு.
Gas-coal
n. வளி வழங்கும் நிலக்கீல் சத்துடைய நிலக்கரி வகை.
Gas-coke
n. வளி நீக்கப்பெற்ற சுட்ட நிலக்கரி.
Gascon
n. 'கேஸ்கனி' என்ற பிரஞ்சுநாட்டு மாவட்டப் பகுதிக்குரியவர், தற்புகழ்ச்சியாளர், (பெ.) 'கேஸ்கனி'யைச் சார்ந்த.
Gasconade
n. தற்புகழ்ச்சியான பேச்சு, (வினை) அளவுமீறித்தற்புகழ்ச்சதியாகப் பேசு.
Gaselier
n. தொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு, கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு.
Gas-engine
n. வளி வெடிப்பாற்றற் பொறி, ஆவி வெடிப்பதனால் இயங்கும் பொறி.
Gaseous
a. வளிநிலையிலுள்ள, வளியுருமான, வளிக்குரிய.
Gas-escape
n. வளி ஒழுக்கு, ஆவி வௌதயேற்றம்.
Gas-field
n. இயல்பான வளிதோன்றும் நிலப்பகுதி.
Gas-filled
a. வளி நிரம்பிய.
Gas-fired
a. வளியினால் வெப்பமூட்டப்பட்ட.
Gas-fitter
n. வீடுகளுக்குரிய வளிவிளக்குகளுக்கான குழாய்களையும் கவரணைகளையும் பொருத்துபவர்.
Gas-fittings
n. கட்டிடத்தில் வளிவிளக்குகள் பொருத்துவதற்கான குழாய்கவரணைத்தொகுதி.
Gash
n. திறந்த ஆழமான வெட்டு, வெட்டுப் போன்ற பிளவு, ஆழ வெட்டுவடு உண்டுபண்ணுஞ் செயல், (வினை) ஆழமான வெட்டு உண்டுபண்ணு.
Gas-heater
n. நிலக்கரி வளிபயன்படுத்தப்படும் சூட்டடுப்பு.
Gas-helmet
n. நச்சுப் புகைகாப்பு முகமூடி.
Gasholder
n. நிலக்கரி வளி சேமிப்புக்குரிய பெரிய சேமகலம்.
Gasification
n. ஆவியாக மாற்றுதல் அல்லது மாறுதல், சுரங்கமிடாப்படாத அடிநிலை நிலக்கரியிலிருந்து நிலக்கரிவளி உண்டுபண்ணுதல்.