English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gelation
n. உறைய வைத்துக் கெட்டியாக்குதல்.
Geld
-1 n. (வர.) முற்கால வரி, (வினை) வரி விதி.
Geld
-2 v. காயடி, விரையெடு, ஆண்தன்மை நீக்கு, கருப்பை அகற்று, உயிர்க்கூறு அகற்று, வலுக்குறை, நீக்கிக்குறை.
Gelding
n. காயடித்தல், விரைநீக்கப்பட்ட குதிரை, காய் அடிக்கப்பட்ட விலங்கு.
Gelid
a. பனிமயமான, பனிபோல் குளிர்ந்த, குளிரான, குளிர்ச்சிமிக்க.
Gelignite
n. வெடியக் கரிநீர்ப்பாகடங்கிய வெடிமருந்து வகை.
Gelt, v. geld
-2 என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Gem, n.,
மணிக்கல், இரத்தினம், பட்டையிட்ட மணிக்கல், உருவம் செதுக்கப்பெற்றுள்ள மணிக்கல், பெருமதிப்புப் பொருள், அரும்பொருள், அரும்பொருளின் மிகச் சிறந்த கூறு, (வினை) மணி இழை, இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனைச் செய், குயிற்று.
Gemara
n. யூதர் திருமுறை நுலின் பிற்பகுதி.
Geminate
a. இரட்டைகளாக இணைந்துள்ள, (வினை) இரட்டையாக்கு, இரட்டிப்பாக்கு, திரும்பச்செய், இரட்டைகளாக ஒழுங்குப்படுத்து.
Gemination
n. இரட்டையாதல், இரட்டையாக்குதல்.
Gemini
n. pl. மிதுனராசி, இரட்டை விண்மீன்கள்.
Geminous
a. (தாவ.) இரட்டிப்பான, இரட்டைகளாயுள்ள.
Gemma
n. (தாவ.) தளிர்மொட்டு, பாசி முளையரும்பு, (வில.) தனி உயிரினமாகும் மொக்குப் போன்ற வளர்ச்சி.
Gemmaceous
a. மொட்டுப்போன்ற, இலைமொட்டுக்கள் சார்ந்த, மொக்குப் போன்ற வளர்ச்சிக்குரிய.
Gemmate
-1 a. மொட்டுக்களையுடைய, மொக்கு விட்டு இனப் பெருக்கமடைகிற.
Gemmate
-2 v. மொட்டுக்கள் தோற்றுவி, மொட்டுக்கள் விட்டு இனம்பெருக்கு.
Gemmation
n. தளிர்த்தல், மொட்டுவிடுதல், மொட்டுவிடும் முறை, மொட்டுகளின் ஓழுங்கமைப்பு, மொட்டுவிடுதல் மூலமான இனப்பெருக்கம், தாய்ச்செடியில் அல்லது உயிரில் மொக்குகளாக வளர்ந்து பின் தாய் உருவிலிருந்து பிரிந்து புதிய செடி அல்லது உயிராதல்.
Gemmative
a. உயிர் மொட்டுவிடுதல் சார்ந்த.
Gemmery
n. மணிக்கற்களின் தொகுதி.