English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Generale
n. பொதுக்கோட்பாடு.
Generalissimo
n. பலதிறப்படை மாபெருந்தலைவர், கடல்நிலவான்படை இணைப்புப் பெருந்தலைவர்.
Generality
n. பொதுநிலை, பொதுத்தன்மை, எடுத்துக்காட்டுகளின் முழுமைக்கும் பொருந்தும் நிலை, தௌதவற்ற நிலை, பொதுச்செய்தி, பொதுக்கோட்பாடு, பொதுவிதி, பொது அறிக்கை, முக்கியமான பகுதி, பெரும்பகுதி, பெரும்பான்மைம, முழுப்பெரும்பகுதி மக்கள், முழுப்பெரும்பகுதிச்செய்திகள், பெரும்பான்மையினர், பெரும்பான்மையான.
Generalization
n. பொதுவிதி, பொதுமெய்ம்மை, பொதுக்கருத்து, பொதுமைப்பாடு, விதிவரு முறையினால் பெறப்பட்ட பொதுக்கருத்து உருவாக்குதல்.
Generally
adv. பெரும்பாலும், பரவலாக, பொதுப்படையாக, பொதுநிலையில், விவரங்களைக் கருத்திற்கொள்ளாமல், தனிப்பட்ட முறையிலன்றி, பொது விதியாக.
Generalship
n. படைத்தலைவர் பதவி, போர்முறைத்திறம், நடைமுறைத்திறம், படைத்துறைத் திறமை, திறமைமிக்க செயலாட்சி, செயல்நயம், வெல்திறம்.
Generant
n. பிறப்பிப்போர், பெற்றோர், உண்டாக்குவது, (வடி.) வடிவாக்கி, தனது இயக்கத்தினால் மற்றொரு வடிவத்தை ஆக்கும் வரி-புள்ளி அல்லது உருவம்.
Generate
v. தோற்றுவி, பிறப்பி, உண்டாக்கு, உற்பத்தி செய், உருவாக்கு, மலர்வி, (கண,) இயக்கத்தால் படியுருவாக்கு.
Generation
n. பிறப்பித்தல், தோற்றுவித்தல், உண்டாக்குதல், இனப்பெருக்கம், ஈனுதல், ஈனப்பெறுதல், இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல், தலைமுறை, வழிவழி மரபில் ஒருபடி, தலைமுறையினர், ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி, ஒத்தகாலத்தவர், தலைமுறைக்காலம், தலைமுறை இடையீட்டுக்காலம், 30 அல்லது 33 ஆண்டுகள்.
Generative
a. மகப்பேறு சார்ந்த, உண்டாக்கவல்ல, பயனுடைய, பிறப்புக்குரிய, இனப்பெருக்கத்துக்குரிய.
Generator
n. மகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி.
Generic
a. இனப்பொதுவியல்பான, இனத்துக்குரிய, பொதுப்படையான.
Generous
a. பெருந்தன்மையுள்ள, பரந்த மனப்பான்மையுடைய, புன்மையற்ற, தப்பெண்ணக் காழ்ப்பேறியிராத, உயர்குணம் வாய்ந்த, இழிகுணமற்ற, ஈகைக்குணமுள்ள, கஞ்சத்தனமற்ற, செழிப்பான, ஏராளமான, மல்கியுள்ள, உணவு-நிறம்-இன்தேறல் வகையில் செழுமையான, நிறைவான.
Generralize
v. பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா, பொதுக் கருத்தாக உருவாக்கு, பொது இயல்பினை ஏற்று, பொதுபெயரிட்டழை, விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு, நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை, (கண., மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு, வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு, ஐயத்துக்கிடமானதாக்கு, பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள், தௌதவற்ற வகையிற் பேசு, பொது ஆட்சிக்குக் கொண்டுவா.
Genesiac, Genesiacal
a. விவிலிய நுலில் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு சார்ந்த.
Genesis
-2 n. விவிலிய நுலில் உலகத் தோற்றம் பற்றிக்கூறும் முதற்பிரிவு.
Genet
n. புனுகுப்பூனை வகை, புனுகுப்பூனை வகையின் மென்மயிர்த்தோல்.
Genetic
a. தோற்றம் பற்றிய, பிறப்பு மூலத்துக்குரிய, மரவு வழிப் பண்பியல் சார்ந்த.
Geneticist
n. மரபுவழிப் பண்பியல் பயிலும் மாணவர்.
Genetics
n.pl. மரபுவழிப்பண்பியல், பரம்பரை உள்ளிட்ட உயிர்நுல் ஆராய்ச்சி.