English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gemmiferous
a. மணிக்கற்களைத் தோற்றுவிக்கிற, மொட்டுக்கள் அல்லது தளிர்கள் தாங்கியுள்ள.
Gemmiparous
a. மொட்டுக்கள் விட்டு இனம்பெருக்குகிற, முகைவிடுழ்ல் சார்ந்த.
Gemmology
n. மணிக்கற்கள் பற்றிய ஆய்வு நுல்.
Gemmulation
n. மரபுக்கூறுகள் தோன்றுதல்.
Gemmule
n. (உயி.) உடலின் பகுதிதோறும் அதனதன் மரபுப்பண்பு பொருந்தப் புத்தாக்கம் பெற்று இனப்பெருக்கம் தூண்டுவதாக டார்வின் கருதிய மரபுக்கூறு.
Gemmy
a. மணிக்கல் பதித்த, சுடர்வீசுகிற.
Gemsbok
n. தென் ஆப்பிரிக்க மான் வகை.
Genappe
n. மழமழப்பான கம்பளிநுல் வகை.
Gendarmerie
n. (பிர.) படைக்கலந் தாங்கிய காவல்துறைப் பிரிவு.
Gender
-1 n. (இலக்) சொல்லின் பால்வகை, ஆண்-பெண் முதலிய பால்களைக் குறிக்கும் சொல்வேறுபாடு.
Gender
-2 v. (செய்) பெறு, பிறப்பி, கல, கூடு, புணர்.
Gendrame
n. (பிர.) பிரஞ்சுக் காவற்றுறை அலுவல்களில் அமர்த்தப்பட்டுள்ள படைவீரர், மலையேற்றத் துறையில் மோட்டுவடிவப்பாறைச் சரிவிடையே செங்குத்தாய் எழும் கோபுரம் போன்ற குவடு.
Gene
n. (உயி.) உயிர்மத்தின் இணைமரபுக் கீற்று.
Genealogical
a. குடிவழிப் பட்டியலுக்குரிய, குடும்ப மரபு மூலங் காட்டுகிற.
Genealogist
n. குடிவழிப் பட்டியல்களை ஆய்பவர், மரபுவழிகளுக்கு மூலங்காட்டுபவர்.
Genealogize
v. மரபுவழி மூலங்காட்டு, குடிவழிப் பட்டியல்கள் எழுது.
Genealogy
n. குடிவழிப் பட்டியல், மூதாதை மரபு வரலாறு, கால்வழி, உயிர் மலர்ச்சி மரபு விளக்கப்பட்டி, மரபு வரிசை ஆய்வு.
Genera, n.pl. genus
என்பதன் பன்மை.
General
n. படைப்பெருந்தலைவர், ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர், போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர், பொதுமுறைப்பணி முதல்வர், துறையரங்க முதல்வர், படைத்தலைமைத் திறமுடையவர், போத்துறை நயத்திற முடையவர், செயலாட்சித் திறமுடையவர், பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு, (பெ.) இனம் முழுவதற்கும் உரிய, பல்வேறுவகைகளை உள்ளடக்கிய, தனித்துறை சாராத, வரையறையற்ற, தனிநிலை அற்ற, முழு மொத்தமான, அனைவர்க்குமுரிய, எல்லாவற்றையும் பாதிக்கிற, பெரும்பான்மைக்குரிய, பொருதுநிலையான, பொதுப்படையான, பெருவழக்கான, பொது நடைமுறையிலுள்ள, பொது வாழ்வு சார்ந்த, பொதுமக்களுக்குரிய, எங்கும் பரவியுள்ள, விளக்கமற்ற, தௌதவற்ற, ஐயத்துக்கு இடமான, முதன்மையான, மேல்நிலைப்பட்ட, பலதுறைத்தலைமையான, (வினை) தலைமை ஏற்று நடத்து, தலைவராகச் செயலாற்று.
General stores
பல்பொருள் அங்காடி