English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Glazier
n. சரளரச் சட்டங்களுக்குக் கண்ணாடி பொருத்துபவர்.
Glazing
n. கண்ணாடி பொருத்துதல், கண்ணாடி பொருத்தும் கலை, பளிங்குப்பூச்சுப் போர்த்தும் கலை, மெருகிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள், சாயங்களின் பொதியப்படும் வண்ணக்கண்ணாடித்தாள்.
Gleam
n. மினுமினுப்பு, பளிச்சிடுதல், மெல்லிய ஔதக்கதிர்க்கற்றை, தடம், சாயல், இடைப்பட்டுத் தோன்றும் பண்பின் மென்கூறு, (வினை) மங்கலாக ஔதவீசு, மின்னு, பளிச்சிடு.
Gleamy
a. மங்கலாகத மினுங்குகிற, மங்கல் ஔதக்கதிர்கள் வீசுகிற.
Glean
n. பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள், பொறுக்குதல், (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு, பொறுக்கிச் சேர், கொந்து, கொய், சிறு அளவுகளாகத் திரட்டு, தூர்த்துத்துடைத்துச்சேர், செய்திகளை திரட்டித்தொகு.
Glebe-house
n. சமயகுருவின் குடியிருப்பிடம்.
Glee
n. மகிழ்ச்சி, எக்களிப்பு, பல்குரற் பாட்டு.
Gleep
n. அணு ஆற்றல் உண்டாக்கவல்ல அமைவு வகை.
Gleet
n. சீநீர், புண்ணீர், புறமேகம், வெட்டை நீர், (வினை) சிலைத்து ஒழுகு.
Glen
n. இடுங்கிய பள்ளத்தாக்கு.
Glendoveer
n. கந்தருவர் போன்ற தேவதை.
Glengarry
n. வட ஸ்காத்லாந்து மேட்டு நிலத்தவர் தொப்பிவகை.
Glenlivet
n. ஸ்காத்லாந்து நாட்டுச் சாராய வகை.
Glenoid, glenoidal
(உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான.
Glib
a. வழவழப்பான, இயக்கும்வகையில் தங்குதடையற்ற, எளிதாக வழுக்கிச் செல்கிற, பேச்சுவகையில் ஆற்றொழுக்கான, தடைப்படாத, கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள, வெறுஞ்சொல் வளமுடைய, (வினை) வழவழப்பாக்கு, (வினையடை) வழவழப்பாக, தங்கு தடையின்றி, பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன், சொல்வளமாக.
Glide
n. இழைவியக்கம், தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு, சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை, (ஒலி.) ஒலியுறுப்புக்களில், ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி, இழைபு நடன இயக்கம், மென்சரிவு, மென்சரிவுச் சறுக்குதளம், ஒழுகியல் ஆறு, ஆற்றின் ஒழுகியற்பகுதி, மரப்பந்தாட்டத்தில் தடவடி, (வினை) இழைந்துசெல், மிதவலாகத் தடவிச் செல், பறவைவகையில் மிதவலாகச் செல், பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல், வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல், கப்பல்வகையில் மிதந்து செல், ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய், பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல், பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல், விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல், மறைவாக நழுவு, முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல், வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
Glider
n. இழைந்து செல்பவர், இழைந்து செல்வது, பொறி அமைப்பில்லாச் சறுக்கு விமானம், கடல்விமானம்.
Gliding
n. நழுவிச் செல்கை, பொறியற்ற வானவூர்தியிற்பறத்தல்.
Glimmer
-1 n. மினுக்கம், மங்கிய ஔத, நடுங்கொளி, தொலைச்சிற்றொளி, மினுங்கொளி, தொலைத் தோற்றம், கணநேரத்தோற்றம், அரைத்தோற்றம், (வினை) விட்டொளிர்.