English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Glass-house
n. கண்ணாடித்தொழிற்சாலை, செடிகளை வளப்பதற்கான கண்ணாடிக்காப்பகம், கண்ணாடிமோடிட்ட நிழற்படத் தொழில்மனை.
Glassine
n. பளிங்கு போன்ற தாள்.
Glassing-jack
n. தோல் பதனிடுபொறி.
Glass-man
n. கண்ணாடி செய்பவர், கண்ணாடி விற்பவர்.
Glass-painting
n. வேதியியல் முறையில் கறைப்படுத்துவது மூலமாகக் கண்ணாடியின்மேல் படங்கள் எழுதும் கலை.
Glass-paper
n. கண்ணாடித்தூள் தூவப்பட்ட தாள்.
Glass-snake
n. எளிதில் ஒடிந்துவிடும் வால் உடைய கால் அற்ற தென் அமெரிக்க பல்லிவகை.
Glass-soap
n. கண்ணாடி செய்பவர்கள் கண்ணாடியிலிருந்து வேண்டாத நிறத்தை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் மங்கனிய ஈருயிரகை போன்ற பொருள்.
Glassware
n. கண்ணாடிக் கருவிகலப் பொருள்களின் தொகுதி.
Glasswork
n. கண்ணாடித் தொழிற்சாலை, கண்ணாடித் தட்டு முட்டுப் பொருள்கள், கண்ணாடித் துணைக்கருவிகலங்கள்.
Glasswort
n. கண்ணாடித் செய்வதில் முன்பு பயன்படுத்தப்பட்ட செடிவகை.
Glassy
a. கண்ணாடி போன்ற, கண்ணாடியின் இயல்புள்ள, கண்வகையில் பார்வை மங்கலான, உணர்ச்சியின் தடமற்ற, துரித்த தோற்றமுடைய, தண்ணீர் வகையில் படிகம் போன்ற, அலையற்ற, அமைதியுடைய, ஔதர்கிற.
Glaswegian
n. கிளாஸ்கோ நகரவாசி, (பெ.) கிளாஸ்கோ நகரம் சேர்ந்த.
Glauberite
n. சாம்பல்நிற வௌளைக் கனிப்பொருள் வகை, பாறை உப்புவகையில் பெரும்பாலும் காணப்படும் உவரசுதைய கந்தகை.
Glaubers salt, Glaubers salts
n. செர்மன் வேதியியலாரான கிளாபர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கனைய நீருடை உவரக் கந்தகை.
Glaucoma
n. (மரு.) கண்விழி விறைப்புநோய்.
Glaucous
a. கடற்பச்சை நிறமுள்ள, சாம்பல் நிறங்கலந்த நீலவண்ணமுடைய, (தாவ.) கொடிமுந்திரிப் பழங்களைப் போல நேர்த்தியான பசுமை போர்த்த.
Glaze
n. மட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு, மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள், துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு, கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம், வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள், பளபளப்பான தோற்றம், (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி, படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை, மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு, மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு, வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து, துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை, கண்மீது வெண்படலம் படர்வி, தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு.
Glazen
a. கண்ணாடி போன்ற, பளபளப்பாக்கப்பட்ட.
Glazer
n. மட்பாண்டமெருகிடுபவர், தாள் மெருகிடுபவர், பொருள்களைப் பளபளப்பாக்குபவர்.