English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Godward
a. கடவுளை நோக்கிய, (வினையடை) கடவுளை நோக்கி, இறைவனின் தொடர்பாக.
Godwit
n. மேல்நோக்கி வளைந்த அலகும் நீண்டு மெலிந்த கால்களுமுடைய சதுப்புநிலப் பறவை வகை.
Goer
n. செல்லுபவர், செல்லுவது, செல்லும் பொருள்.
Goethian
n. கெதே என்னும் செர்மன் கவிஞரைப் பின்பற்றுபவர், (பெ.) கவிஞர் கெதேயைச் சார்ந்த, கெதேயைப் போன்ற, கெதேயின் நுல்களைச் சார்ந்த, கெதேயின் கருத்துக்களுக்குரிய.
Gofer
-1 n. பிஸ்கோத்து வகை, தேன்கூடுபோன்ற வரியமைப்புடைய மாப்பண்டம்.
Gofer(2), n. goffer
மடிப்புகள், சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி, கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல், (வினை) சால்வரியிடு, சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
Goffering
n. மடிப்புகள், சுருக்கங்கள், மடிப்புகள், சுருக்கங்கள் செய்யும் முறை, புத்தக விளிம்பில் பற்களாக வெட்டும் வேலை.
Go-getter
n. (பே-வ.) விடாக்கண்டன், தன்முனைப்புக்காரர்.
Goggle
a. விழி பிதுங்கியுள்ள, விழி வகையில் உருண்டு திரண்ட, உருட்சி வாய்ந்து சுழல்கிற, (வினை) விழிகளையுருட்டிப்பார், சாய்த்துப்பார்.
Goggle-eyed
a. முட்டைக் கண்ணுடைய, பெந்தை விழியுடைய, திருகு விழியுடைய, விழிசுழல்வுடைய.
Goggles
n.pl. பாதுகாப்புக் கண்ணாடி, வலைக்காப்புடைய வண்ணமூக்குக் கண்ணாடி வகை, ஆட்டு நோய் வகை.
Goidel
n. ஸ்காத்லாந்து-அயர்லாந்து மக்களின் தொன்மூதாதையரின் இனத்தவர்.
Going
n. செல்லுதல், புறப்பாடு, வாழ்ககைப்போக்கு, வழிநிலை, பயணநிலை, முன்னேற்றம், (பெ.) போகிற, செயற்படுகிற, இயக்க நிலையிலுள்ள, உளதான நிலையுடைய, கைக்குக் கிடைக்கக் கூடிய, செயற்பட இருக்கிற, வயதுவகையில் அணுகுகிற.
Goitre
n. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல்வளை தொங்கு சதையாக வீங்கி ஆறாத கோளாறு.
Goitrous
a. குரல்வளைச் சுரப்பி வீக்கமுடைய, குரல்வளைச் சுரப்பி வீக்கம் போன்ற.
Golconda
n. செல்வக் களஞ்சியம்.
Gold
-1 n. பொன், தங்கம், பொன் அணிகலத்தொகுதி, பொன் நாணயம், பணம், செல்வம், விலை மதிப்பற்ற பொருள், அழகும் ஔதயும் உடைய பொருள், அம்பு எய்வதற்குரிய இலக்கு, பொன்நிறம், தங்கவண்ணம், (பெ.) பொன்னாலான, தங்கம் போன்ற, பகுதி பொன்னாற்செய்யப்பட்ட, நாணய வகையில் மதிப்புக்குறையா
Gold
-2 n. மஞ்சள் வண்ண மலர்ச்செடி வகை.