English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Governance
n. ஆளுகை, ஆட்சி, ஆட்சிமுறை, கட்டுப்பாடு, கட்டளை, அதிகாரம், நடத்தை.
Governess
n. ஆசிரியை, வீடுகளில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்துப் பார்த்துக் கொள்பவள், (வினை) ஆசிரியையாகச் செயலாற்று, ஆசிரியையாகத் தொடர்பு கொண்டிரு.
Governess-car, governess-cart
n. இருக்கைகள் எதிரெதிராயமைந்த பளுவற்ற இருசக்கர வண்டி.
Governing
a. கட்டுப்படுத்தும் ஆற்றலுடைய.
Government
n. ஆட்சி முறை, ஆட்சி, ஆளுநர் குழு, ஆட்சி உரிமை பெற்றவர் குழு, அரசு, அரசியல், அரசியலார், அமைச்சரவைக் குழு, ஆளுநர் கால எல்லை, ஆளுநர் ஆட்சிப் பரப்பு மாகாணம், (இலக்,) மற்றொரு சொல்லின் வேற்றுமையை அறுதிசெய்வதற்குரிய சொல்லின் ஆற்றல், (பெ.) அரசதியலாருக்குரிய, அரசியலாரால் சொல்லின் ஆற்றல்.
Governmental
a. அரசாங்கத்துக்குரிய, ஆட்சிக்குரிய.
Governor
n. ய்.ஆளுநர், மாநில ஆட்சித்தலைவர், ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி, கோட்டைக் காவலர், கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர், நிறுவனத்தின் தலைவர், நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர், சிறைச்சாலைப் பொறுப்பாளர், மேற்பணி முதல்வர், தலைவர், தந்தை, ஆசான், இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு, தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ,
Governor-genral
n. மாநில ஆட்சித் தலைவர் முதல்வர்.
Gowing-point
n. செடிகளின் வளர்நுனி, தண்டுகளின் நுனியிலுள்ள ஆக்குக் தசைப்பகுதி.
Gown
n. அங்கி, நிலையங்கி, பெண்களின் நெடுஞ்சட்டை, மேலங்கி, பண்டைய ரோமாபுரியினரின் புற உடுப்பு, நகரத்தந்தை-நீதிபதி-வழக்குரைஞர்- மதகுரு-பல்கலைக் கழகத்தினர் முதலியோர் அணியும் வெவ்வெறு வடிவங்களிலுள்ள பணிமுறை அங்கி, (வினை) நெட்டங்கி உடுத்திக்கொள், மேலங்கியணிவித்துப் பதவியிலமர்த்து.
Gownman, gownsman
படைத்துறைசாராப் பொதுமகன், பல்கலைக் கழக உறப்பினர்.
Goy
n. செர்மானிய யூதவழக்கில் யூதர் அல்லாதவர், பிற இனத்தவர்.
Graafian
n. ஆலந்து நாட்டு உள்ளுறுப்பியலாரான கிராப் என்பவருக்குரிய.
Grab
-1 n. கீழ்த்திசைக் கரையோரக் கப்பல்.
Grab
-2 n. இறுகு பிடிப்பு, பறிப்பு, பறிக்கும் பண்பு, சுரண்டல், அரசியல் சூறை, வாணிகக் கொள்ளை, பற்றமைவுப் பொறி, பற்றுகருவி, சிறுவர் சீட்டாட்ட வகை, (வினை)திடீரெனப் பறி, சடுதியில் கைப்பற்று, பற்றிப் பறி, சுரண்டு, பேரவாக்கொண்டு பிடுங்கு, கொள்ளையிட்டுத் தனதாக்கிக்க
Grabber
n. பேரவாவுடன் பறிப்பவன், பேராசைக்காரன்.
Grace
-1 n. ய்.நயம், பண்பு, கவர்ச்சிக்கூறு, இனிமைப் பண்பு, வனப்பு, அழகுக் கூறு, அணிநயம், செயற்பாங்கு, செயல் வண்ணம், அருள், அருள்பாலிப்பு, அனுக்கிரகம், அருட்பேறு, கடவுட்பேறு,. அருட்கொடைட, தெய்வத்திறம், தெய்வ அருளிரக்கம், தயவு, பரிவு, அருட்கனிவு, கருனை, நல்லெண்ண
Grace
-2 n. உள்ளுரொடும் நெடுந்தொலைவொடும் நேரே தொடர்பு கொள்ளக்கூடிய தானியங்கி தொலைபேசி.
Grace-cup
n. விருந்தின் முடிவில் அருந்தப்படும் கிண்ணத்து தேறல்.
Graceful
a. இயல் நயமுடைய நேர்த்தியான, நாகரிகமான, அழகிய, தகவுடைய, பொருத்தமான, அருள் நிறைந்த, அருள் பாலிக்கிற.