English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gothicism
n. முற்காலக் கிழக்குச் செர்மானிய இன மொழி மரபு, இடைநிலைக் காலக் கூர்மாடச் சிற்பப்பாணி, பண்படாப் பழக்க வழக்க நிலை, முரட்டுப் பண்பு.
Go-to-meeting
a. தொப்பி ஆடை முதலிய வற்றின் வகையில் திருக்கோயிலுக்குச் செல்வதற்குத் தகுதியான.
Got-up
a. செயற்கையான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட, போலிப் பகட்டான, ஏமாற்றும் நோக்கத்துடன் போலியாகப் புனையப்பட்ட.
Gouache
n. (பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை, மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம்.
Gouda
n. ஆலந்து நாட்டுப் பாலேட்டுக்கட்டி வகை.
Goud-worm
n. பூசனி விதையை யொத்த ஈரல் கிருமிவகை.
Gouge
n. நகவுளி, தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளிவகை, (வினை) நகவுளியால் வெட்டு, நகவுகளியால் தோண்டு, நகவுகளியால் தோண்டியெடு, கண்ணைத் தோண்டியெடு.
Goulard
n. ஈயத் துணைக்காடிகக் கரைசலடங்கிய கழுவுநீர் மருந்து.
Goulash,
இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை, மறுவகை பிரிப்பு, சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை.
Gound-annual
n. (சட்.) நிலத்திற்கான ஆண்டுக்கட்டணம்.
Gourd
n. சுரைக் கொடியினம், சுரையினக் கொடியின் காய், சுரைக்காய், சுரைக் குடுக்கை.
Gourdy
a. கால்களில் வீக்கங் கண்டுள்ள.
Gourmand
n. வயணமாகச் சாப்பிடுவதில் விருப்பமுள்ளவர், நல்ல சாப்பாட்டினை மதிப்பீடுபவர், பெருந்தீனிக்காரர் (பெ.) பேருண்டியரான, பெருந்தீனி கொள்கிற, தீனிவிருப்பமிக்க.
Gourmet
n. உணவு குடிவகைச் சுவையுணர்வாளர், இன்தேறல் வகைகளின் சுவையுணர்புமிக்கவர்.
Gout
-1 n. (மரு.) கீல் வாதம், சந்துவாதம், ஊளைச்சதை நோய், கோழி முதலிய பறவைகளுக்கு வரும் சிலேட்டும் சூலை, கோதுமைத் தண்டு புடைப்பு, துளி, அழுக்குத் தெறித்த புள்ளி.
Gout
-2 n. இன்சுவை, நறுஞ்சுவை.
Gout-fly
n. கோதுமைத் தண்டுகளைத் துளைத்து வீங்குவிக்கும் முட்டைப்புழுக்களை ஈனும் ஈ வகை.
Goutweed, goutwort
கீல்வாதத்துக்கு நல்ல தென்று நெடுங்காலம் கருதப்பட்டு வந்த குடைப் பூங்கொத்துடைய செடிவகை.
Gouty
a. சந்து வாதம் சார்ந்த, கீல்வாத நோய்க்கு ஆளான.
Govern
v. ஆளு, நேரடியாக ஆட்சி நடத்து, கோட்டையின் பொறுப்பாட்சி செய், நகரத்தின் பாதுகாப்பாட்சி ஏற்றுநடத்து, செயலாட்சி செய், செயல்முறைக்கான கோட்பாடுகளை வகுத்தியக்கு, ஆட்சிச் செயல்முறைகளை ஒழுங்கு படுத்து, வகைப்படுத்து, நெறிப்படுத்து, தூண்டு, ஆட்கொண்டியக்கு, வசமாகக்கொண்டு நடத்து, செல்வாக்கால் செயற்படுத்து, அடக்கியாளு, கட்டுப்படுத்து, செயலுறுதிசெய், ஆற்றலில் முதன்மை பெற்றிரு, சட்டக்கட்டுப்பாடுடையதாயிரு, உரிமையெல்லைக்குரியதாய் அமை, தொடர்புடையதாயிரு, அறுதி செய்ய உரியதாயமை, (இலக்.) தனிச்சாப்புடையதாகப் பெற்றிரு, அவாலி நில், தனிப்பட்ட வேற்றுமையை வேண்டிநில்.