English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gormandize
n. வயணமாகச் சாப்பிடுந்திரண், வயணமாகச் சாப்பிடும் பழக்கம், குதிர்மை, (வினை) பெருந்தீனி கொள், பேராசையுடன் விழுங்கு.
Gorse
n. மஞ்சள் மலர்களும் முட்களும் உடைய புதர்ச் செடிவகை.
Gorsedd
n. வேல்ஸ் நாட்டுப் பாணர்கள்-மதகுருக்கள் மாமன்றத்துக்கு முன்னீடான நாட்கூட்டம்.
Gory
a. குருதிபோன்ற, குருதிக் கறைபடிந்த, குருதி தோய்ந்த.
Goshawk
n. குறுஞ்சிறகுடைய பெரிய வல்லுறு வகை.
Gosling
n. வாத்துக் குஞ்சு.
Gospel
n. நற்செய்தி, இயேசுநாதர், அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு, இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை, இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று, திருநல்லேடு, திருமறை நுல், திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி, உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி, நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு, செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம், வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை, பரப்பாதரவுக்குரிய முறைமை, உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Gospel-book
n. கூட்டுத்தொழுகையின் போது படிக்கப்படும் திருநல்லேட்டுப் பகுதிகள் அடங்கிய சுவடி.
Gospeller
n. கூட்டுத்தொழுகையின் போது திருழால் படிப்பவர், சமய போதகர், சமய ஆர்வலர்.
Gospel-shop
n. மெதடிஸ்ட் என்னும் கிறித்தவ உட்சமய வகுப்பைச் சார்ந்தவர் தொழுமிடம்.
Gosppelize
v. மறைநுற் பொருள்களை எடுத்துறை, மறைநுலுக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்.
Gossamer
n. சிம்பி நுல், காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல், புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள், நொய்ம்மைப் பொருள், நொய்தான மெல்லிய வலைத்துணி, (பெ.) இலேசான, நொய்தான.
Gossip
n. பயனில பேசுபவர், செய்தி பரப்புகிறவர், வம்பர், வீண்பேச்சு, வதந்தி, துழாவாரம், மன்ம்போன போக்கிலான வரம்பற்ற பேச்சு, பழிமொழி, (வினை) வறுமொழி பேசு, வாய்க்கு வந்தன கூறு, வீணுரையாடுட, மனம்போன போக்கில் எழுது.
Got, v..,get
என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
Goth
n. முற்காலச் செர்மன் இனத்தவர், கல்வியறிவும் நாகரிகமும் அற்றுக் கலைபொருள்களை அழிக்கும் முரடர்.
Gotham
n. கற்பனைக் கோமாளி நகரம்.
Gothamist, Gothamite
பேதை, படித்தவன்போல் நடிக்கும் முட்டாள்.
Gothic
n. முற்காலக் கிழக்குச் செர்மானிய இனத்தவரின் மொழி, இடைநிலைக்காலக் கூர்மாடச் சிறபப் பாணி, அச்சுருப் பழம்படிவ வகை, (பெ.) கிழக்குச் செர்மனிய இனத்தவருக்குரிய, கிழக்குச் செர்மனிய இன மொழிக்குரிய,(க-க.) இடைநிலைக்காலக் கூர்மாடச் சிற்பப்பாணியில் அமைந்த, பண்படாத, முரடான, அச்சுருப் பழம்படிவ வகையில் அமைந்துள்ள, பழங்கால ஆங்கில அச்சுருப் படிவத்தில் உள்ள.