English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ground-floor
n. கட்டிட அடித்தளம், வௌத நிலத்தள மட்டத்திலுள்ள வீட்டுத்தளம்.
Ground-game
n. வேட்டையாடற்குரிய விலங்கு வகை.
Groundgudgeon
n. நன்னீரில் வாழும் சிறிய உணவுமீன் வகை.
Groundhog
n. வளை தோண்டி வாழும் கொறிவிலங்கு வகை.
Ground-ice
n. நீரின் அடித்தளத்தில் உருவாகும் உறைபனி
Grounding
n. அடிப்படை, பொருள் பற்றிய ஆழ்ந்த பொது அறிவு, பூ வேலையின் பின்னணி வண்ணம், நிலத்தைப் பண்படுத்திச் சுத்தம் செய்யும் முறை, நிலத்தளத்தைச் சீர் செய்யும் செயல், நிலந்தட்ட வைத்தல், நிலந்தட்டுதல்.
Groundivy
n. செந்நீல மலரும் குண்டிக்காய் வடிவ இலைகளும் கொண்ட பிரித்தானிய நிலம் படர்கொடி வகை.
Groundless
a. ஆதாரமற்ற, காரணமில்லாத, அடிப்படையற்ற.
Groundling
n. நீரின் அடியில் வாழும் மீன் வகை, நாடகக் கொட்டகையில் கடைசி வகுப்புப் பார்வையாளர் பொது வகுப்பினரில் ஒருவர், சுவை உயர்வற்றவர், கொடி வகை, குறும் புதர்ச் செடிவகை.
Groundman
n. மரப்பந்தாட்ட ஆட்டவரம்பு நிலப் பாதுகாப்பளர், வானுர்தி நிலையத் தொழில் நுட்ப வேலைக்காரர்.
Groundmass
n. எரிமலைப் பாறையில் பெரும்படி மணித்துகள் பொதிந்த சிறு பொடித் திரட் பிழம்பு.
Ground-moraine
n. நகர்ந்து செல்லும் பனிப்பாறையின் அடிப்புறத்திலிழுத்துச் செல்லப்படும் சேறு கல் மவ்ல் கூளம்.
Ground-note
n. மட்டக் குரல்அடிப்படையான தாய்ச்சுரம்.
Ground-nut
n. மணிலாக்கொட்டைட, வேர்க்கடலை, நிலக்கடலை.
Ground-officer
n. பண்ணைநில மனையிட மேலாளர்.
Ground-pine
n. குங்கிலியம் போன்ற மணமுள்ள மூலிகை வகை.
Ground-plan
n. கட்டிடத்தின் நிலத்தள மாதிரிப்படம், பொதுமாதிரித் திட்டம்.
Ground-plot
n. கட்டிடத்துக்குரிய மனையிடம், கட்டிடம் எடுக்கப்பட்டிருக்கும் எல்லையுட்பட்ட மணைநிலம்.
Ground-rent
n. கீழ்வாரம்,நில உரிமையாளருக்கு அளிக்கப்படும் மனைநில வரி.
Grounds, n,pl.
மதிலகச் சுற்றுநிலம், கட்டிடத்தைச் சுற்றி விடப்பட்ட நிலப்பரப்பு.