English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Grouch
n. (பே-வ.) முனகுபவர், மனக்குறையுடையவர், மனக் குறைவால் மூலையில் சோர்ந்திருத்தல் (வினை) முனகு, முணுமுணு.
Ground
-1 n. நிலத்தளம், தரை, நிலப்பரப்பின் ஒரு பகுதி, நிலம், நில உடைமை, மண், மின் துறையில் மண்தொடர்பு, நிலை, சூழமைவு, செயற்களம், நிளைக்களம், அடித்தளம், அடிப்படை, வணடல், கசடு, அடிமண்டி. போதிய காரணம், எண்பித்ததற்கான அடிப்படை, பரப்பு, சுற்றெல்லை, கலைத்துறையில் பின்
Ground
-3 v. அரைக்கப்பட்ட.
Ground(2), v.grind
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Groundage
n. கப்பல் துறைமுக நுழைவுக் கட்டணம், கரையோரக் கப்பல் கட்டணம்.
Ground-angling
n. மிதவையின்றி மீன் பிடித்தல், தூண்டிலுக்கருகில் பளுவை வைத்து நீரடியில் மீன்பிடித்தல்.
Ground-ash
n. மரவகையின் இளங்கன்று, மரவகை இளங்கன்றினால் செய்யப்பட்ட கைக்கோல்.
Ground-bait
n. அடித்தணத்தூண்டிலிரை, நீரின் அடித்தளத்திற்குப் போகும்படிப் போடப்படும் தூண்டிலிரை, (வினை) அடித்தளத் தூண்டிலிரையிட்டு மீன்பிடி, அடித்தளத் தூண்டிலிரை பொருத்து.
Ground-bass
n. முற்பகுதி பன்முறை இரட்டிவரும் மட்டக் குரலிசைக்குரிய குறுகிய இசைப்பகுதி.
Ground-box
n. தோட்டப்பண்ணை ஓரங்களில் அணைத்து வைக்கப்டும் பெட்டி.
Ground-colour
n. உடல்நிறம், வண்ணத்தின் அடிப்படை மூல முதற்பூச்சு.
Ground-control
n. விமானத்துறையின் நில அறிவிப்பாட்சி, விமானம் இறங்கும் வகையில் வானலைவாங்கித் தகவலின் துணையால் நிலப்பரப்பு அலுவலகம் செலுத்தும் அறிவிப்பாட்சி.
Ground-cuckoo
n. நிலக்குயில் வகை.
Ground-dove
n. தரைப் பழக்கவழக்கமுள்ள அமெரிக்க சிறு புறா வகை.
Grounded
a. உறுதியாக நிலைநாட்டப்பட்ட, நன்கு நிலை நாட்டப்பட்ட.
Groundedly
adv. போதிய காரணங்களோடு, போதிய ஆதாரத்தின் மீது.
Grounder
n. நிலத்தோடு தாழ்ந்து செல்லும் பந்து.
Ground-feeder
n. நீரின் அடித்தளத்தில் உணவுபண்ணும் மீன் வகை.
Ground-fish,
நீரடியில் வாழும் மீன்.
Ground-fishing
n. நீரடித் தூண்டிலிரையால் மீன்பிடித்தல்.