English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Halt
-1 n. தங்குதல், நிற்குமிடம், அசையாநிலை, (வி.) அசைவின்றி நில், சிறிது தங்கு, நிறுத்திவை.
Halt
-2 n. நொண்டி நடத்தல், (பெ.) நொண்டியான, முடமான, நொண்டுகிற, (வி.) தயங்கிநட, நொண்டு, தயங்கு.
Halter
n. ஆடு மாடு குதிரைகளுக்கான கண்ணிக் கயிறு அல்லது தோற்பட்டை வார், தூக்குக் கயிறு, தூக்குச் சாவு, (வி.) கண்ணியுடைய கயிற்றினால் கட்டு, தூக்கிலிடு.
Halter-break
v. கண்ணிக்கயிறு பூட்டிக் கொள்ளாக் குதிரையைப் பழக்கு.
Halve
v. பாதிகளாகப் பிரி, சமமாகப் பங்கிடு, பாதியாகக் குறை, குறுக்குவெட்டு மரம் ஒவ்வொன்றின் கனத்தையும் பாதியாகக் குறைத்து இணை.
Halyard
n. கப்பலின் பாயை உயர்த்துதற்கும் இறக்குதற்கும் உரிய கயிறு அல்லது கருவி.
Ham
-1 n. தொடையின் பின்புறம், உப்பிட்ட பன்றித்தொடை உணங்கல்.
Ham
-2 n. (வர.) நகரம், கிராமம்.
Hamadryad
n. தான் வாழும் மரத்துடனேயே மடியும் வன் தேவதை, இந்திய நச்சுப்பாம்பு வகை, அபிசீனியக் குரங்கு வகை.
Hamburg
n. கறுப்பு வகைத் திராட்சை, சிறு வீட்டுக் கோழிவகை.
Hames
n. pl. சுமை இழுக்குங் குதிரைக் கழுத்துப்பட்டைச் சட்டங்கள்.
Ham-fisted, ham-handed
a. செப்பமற்ற.
Hamite
n. எகிப்திய அல்லது ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவராகிய ஹாம் என்பரின் வழிவழி மரபினர் எனக் கருதப்படுவர்.
Hamite
-2 n. கொக்கிவடிவத் தோட்டினை உடைய புதை படிவ நத்தையின் உயிர்வகை.
Hamlet
n. சிறு கிராமம், திருக்கோயில் இல்லாத சிறு கிராமம், தொட்டி, சிற்றுர்.
Hammam, hammum
நீராடுதற்கான விடுதி, துருக்கி நாட்டுக் குளிக்கும் அறை.
Hammer
n. சுத்தி, சம்மட்டி, கடிகார நரம்பு, இசைப்பெட்டி நரம்பு, சுடும் படைக்கலத்தில் மருந்தினை வெடிக்கவைக்கும் பொறியமைவு, ஏலம் போடுவோர் ஒரு பொருள் விற்கப்பட்டுவிட்டது என்பதை அடித்து அறிவிக்கப்பயன்படுத்தும் மரக்கொட்டாப்புளி, காதில் உள்ள சிறு எலும்பு, (வி.) சம்மட்டியால் அடி, சம்மட்டியால் அடித்துச் செலுத்து, சம்மட்டியால் அடித்து உருவாக்கு, கடுந்தண்டனைக் கொடு, போரில் அல்லது விளையாட்டில் அடியோடு தோல்வியுறும் படிசெய், பங்கு மாற்ற வகையில் சம்மட்டியால் மூன்று முறை அடித்து தவறியவரென்று அறிவி, பண்டத்தின் விலை இறங்கும்படிசெய், விற்றல் வாங்கல்களில் சோர்வூட்டு.
Hammer-beam
n. (க-க.) முதன்மையான உத்தரத்துக்குக் கீழே சுவரிலிருந்து பிதுங்கி வந்திருக்கும் தூலம்.
Hammer-cloth
n. வண்டியில் வலவன் இருக்கையை மூடி இருக்கும் ஒப்பனைத் துணி.
Hammer-fish
n. சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை.