English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hammer-head
n. சம்மட்டியின் தலைப்பாகம், சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை, ஆப்பிரிக்க பறவை வகை.
Hammer-lock
n. முதுகுக்குப்பின் வளைத்து வைத்துக்கொள்ளும் மல்லன் கைப்பிடி.
Hammerman, hammer-smith
n. கருமான.
Hammer-toe
n. (மரு.) கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக்கோணல்.
Hammock
n. கித்தான் அல்லது வலையினாலான ஏனை போன்ற தூங்கு மஞ்சம்.
Hamper
-1 n. சிப்பங்கட்டுதற்கான கூடைப்பெட்டி, பெரிய கூடை, தின்பண்ட அடைப்பை, மதுக்குப்பி அடைப்பை.
Hamper
-2 n. கப்பல் அடைசத் தளவாடம், (வி.) தடுத்து இடர் செய், இடையூறுக்குள்ளாக்கு.
Hampton Court
n. தேம்ஸ் ஆற்றின் கரையில் லண்டனுக்கு அருகே அரசர்களின் அரண்மனையாய் இருந்த கட்டிடம்.
Hamshackle
v. குதிரை முதலியவற்றின் தலையையும் முன்னங்காலையும் கயிற்றால் பிணைத்துத் தளைபூட்டு, விலங்கிடு, தடைசெய்.
Hamster
n. கன்னப்பைகளுள்ள பெரிய எலிபோன்ற கொறி விலங்கு வகை.
Hamstring
n. மனிதர்களின் பின் தொடைத் தசைநார், நாற்கால் விலங்குகளின் பின்னங்கால் பின் தொடையிலுள்ள பெரிய தசைநார், (வி.) பின் தொடை நரம்புகளை வெட்டி முடமாக்கு.
Hamulus
n. (உள்., வில., தாவ.) கொக்கி போன்ற முனைப்பு.
Hand
n. கை, நுதிக்கை, குரங்கின் நான்கு கால்களிலும் நுதிப்பகுதி, நாற்கால் விலங்கின் முன்னங்கால், மேலாண்மை உரிமை, செயலாட்சி, செயல்முதல், செயலிற் பங்கு, திருமண வாக்குறுதி, ஏதாவதொன்றைச் செய்பவர், ஒன்று வௌதப்படுவதற்கு மூலமாயிப்பவர் அல்லது மூலமாயிருப்பது, திறமை, வேலைப்பாட்டுத்திறம் அல்லது பாணி, மேடைக்கோற்பந்தாட்டம்-ஆவட்டம், எழுதும் விதம் அல்லது பாணி, கையெழுத்து, கைபோன்ற பொருள், கடிகாரத்தின் முள் அல்லது ஊசி, வாழைக்குலை சீப்பு, புகையிலைக்கட்டு என்பதுபோல் பல்வேறு பண்டங்களின் குறிப்பிட்ட அளவு, நான்கு அங்குலம் கொண்ட நீட்டலளவை, சீட்டாட்ட வகையில் ஓர் ஆட்டக்காரருக்குக் கிடைத்த சீட்டுக்கள், சீட்டுக்களை வைத்துக்கொண்டு இறங்க இருப்பவர், (வி.) கையினால் ஒருவருக்கு உதவி செய், கைகொடுத்து உதவு, (கப்.) பாய்சுருட்டு, கொடு, ஒப்புவி.
Hand;led
a. கைப்பிடி உடைய.
Hand-bag
n. மகளிர் கைப்பை.
Hand-ball
n. எறிந்து பிடிக்கும் பந்து விளையாட்டு.
Handbell
n. கைப்பிடி மணி.
Hand-bill
n. துண்டறிக்கை, மெல்லிய அரிவாள் வகை.
Hand-book
n. கையேடு, கைச்சுவடி, வழிகாட்டு நுல்.