English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hawk-nosed
a. வளைந்த மூக்குடைய, பருந்தினத்தினது போன்ற மூக்குடைய.
Hawse
n. விலாத்துளையிடம், கப்பலின் பக்கங்களில் நங்கூரக் கம்பிவடத் துளைகளிடப்பட்டுள்ள இடம், இணை நங்கூர இடைவௌதயமைவு, கப்பல் தலைப்புக்கும் நங்கூரத்திற்கும் உள்ள இடைவௌத.
Hawse-hole
n. கப்பலின் நங்கூரக் கம்பிவடத் துளை.
Hawser
n. நங்கூரக் கம்பிவடம், எஃகினால் ஆன திண்ணிய வடம்.
Hawthorn
n. வெண்மை சிவப்பு இளரோஜா முதலிய நிறமுடைய மலர்களும் திண்சிவப்பு நிறமுடைய சிறு பழங்களுங் கொண்ட முட்செடி வகை.
Hay
-1 n. உலர்புல், கால்நடைத் தீவனத்திற்காக அறுத்து உலர்த்தப்பட்ட புல், (வி.) உலர்புல்லாக்கு, புல் உலர்த்து, நிலத்தை உலர்புற் பயிருக்கு உரியதாக்கு.
Hay
-2 n. நாட்டுப்புற நடனவகை, நாட்டுப்புற ஆடற்கலை.
Hay
-4 int. வாட்போரில் வெற்றி ஏற்படும்பொழுது விளையும் வியப்பொலி.
Hay-band
n. வைக்கோற்புரி, உலர்ந்த புல்லை முறுக்கிச் செய்த கயிறு.
Hay-bote
n. வேலிகளையும் அடைப்புக்களையும் சீர்செய்வதற்காக மரத்தை வெட்டுவதற்கான குடிக்கூலிக்காரருக்குள்ள உரிமை.
Hay-box
n. பதனுணுப்பெட்டி, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவை வைத்து முற்றிலும் பக்குவமடையச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் உலர்புல்லடைத்த காற்றுப்புகாப் பெட்டி.
Hay-cock
n. உலர்புல் குவியல், வைக்கோற் போர்.
Hay-fever
n. தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக் காய்ச்சல் வகை.
Hay-field
n. உலர்புற்களம், புல் உலர்த்துபுலம்.
Hay-fork
n. உலர்புல் கவர்க்கோல், உலர்புல்லைப் புரட்டப் பயன்படும் நீண்ட பிடியுடைய கவர்முட்கருவி.
Haying
n. உலர்புல் அறுவடை, புல் உலர்த்தல்.
Hayloft
n. வைக்கோற்பரண், வைக்கோல் வைப்பதற்கான மேலிடம்.
Hay-maker
n. புல் உலர்த்துபவர், அறுத்த புல்லைக் கிளறிப்பரப்பியக் காய வைப்பவர், புல் கிளறி உலர்த்துவதற்கான கருவி.