English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Head-boom
n. கப்பலின் பாய்மர விரிவு.
Headborough
n. (வர.) சிறு காவலர், காவல்துறைப்பணியாள்.
Head-boy
n. பள்ளியில் சட்டாம்பிள்ளை.
Head-dress
n. தலைப்பாகை, பெண்டிர் தலையுடைக்கோல்ம்.
Headed
a. தலையுள்ள, தலைவருள்ள, முதல்வராகக் கொண்ட.
Header
n. நடத்திச் செல்பவர், வழிகாட்டி, தலைகீழாக நீரில் மூழ்குதல், சுவரின் முன்பகுதிக்குச் செங்கோணத்தில் பொருத்தப்பட்ட கல் அல்லது செங்கல், தலையிடிக்கும் அடி, தலை கொடுத்தடிக்கும் உதைபந்து, மிடாக்களுக்கு மூடி செய்து பொருத்துபவர்.
Head-fast
n. நங்கூரம் பாய்ச்சி உறுதியாகப் பிணைப்பதற்காகக் கப்பலின் முன்புறத்திலுள்ள திண் கயிறு.
Headgear
n. தலையணி, குல்லாய், தொப்பி.
Head-hunter
n. எதிரிகளின் தலைகளை வெற்றிச் சின்னங்களாகக் கருதிச் சேர்க்கும் காட்டுமிராண்டி.
Headiness
n. மடத்துணிச்சல், அடங்காத துடுக்குத்தனம், மட்டற்ற வெறியூட்டுந் திறம்.
Heading
n. காற்பந்தாட்ட வகையில் பந்தினைத் தலையால் மோதுதல், தலைப்பு, பக்கத்தலைப்பு, தலையரங்கம், சுரங்கப் பாதை அல்லது குடைந்து பாதை அமைப்பதற்காக போடப்படும் முதல் தளமட்டப் பாதை, முன்செல்லுதல், முன்னேறுதல்.
Headland
n. கடலில் புகுந்துள்ள மேட்டுநிலப் பகுதி, நிலக்கூம்பு, வயலின் ஒரு மூலையில் உழுது பயன்படுத்தாது விடப்பட்ட பகுதி.
Headlight
n. முன்விளக்கு, உந்துவண்டி கப்பல் விமானத்தில் ஆகியவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள வௌதச்சம் மிக்க விளக்கு.
Headlight
முகப்பு விளக்கு
Headline
n. பத்திரிக்கைத் தலைப்பு, வானொலியில் முதலிற்கூறப்படும் செய்திச் சுருக்கம்.
Head-liner
n. நிகழ்ச்சிநிரலில் முனைப்பான இடம்பெறுபவர்.
Headlong
a. தலைகுப்புறப் பாய்கிற, தலைகீழான, துணிகரமான, கண்மூடித்தனமான, பதற்றமான, விரைவுடைய, (வினையடை) தலைகீழாக, பதற்றமாக, மிகுவிரைவாக, முன்யோசனையற்று.
Head-man
n. தலைவன், வழிகாட்டி, குலத்தலைவன்.
Headmark
n. தனிப்பட்ட தன்மை.
Headmaster
n. பள்ளித்தலைவர், தலைமையாசிரியர்.