English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Head-voice
n. பேச்சு பாட்டு வகையில் உயர்பதிவுக் குரல்.
Headwaiter
n. அருந்தகங்களிலுள்ள தலைமைப் பணியாள்.
Headway
n. முன்னேற்றம், (கப்.) செல்லும் விரைவு அளவு, (க-க.) வளைவின் உயரம்.
Head-wind
n. எதிர்க்காற்று.
Heady
a. மூளையைத் தாக்குகிற, வெறியூட்டுகிற, அழற்சியுடைய, முரட்டுத்தனமான, பதற்றமான.
Heal
v. குணப்படுத்து, நோயாளியை மீண்டும் நலம்பெறச் செய், புண் ஆற்று, காயம் ஆறு, குணப்படு.
Heal-all
n. சஞ்சீவி, அனைத்து நோய் மருந்து, பூண்டு வகைகளுக்கு வழங்கும் பெயர்.
Health
n. உடல்நலம், உடல்நிலை, ஆரோக்கியம், நோயற்ற நிலை, வாழ்த்தொடு அருந்தும் நீர்.
Health centre
நலமையம், நல்வாழ்வு நிலையம்
Healthful
a. உடல்நலம் ஆர்ந்த, உடல்நலம் உண்டுபண்ணுகிற, உடல்நலம் பேணுகிற, உடல்நலங் குறித்த, உளநலத்துக்கு உகந்த.
Health-officer
n. சுகாதார அலுவலர், உடல்நலத்துறைப் பணிமேலாளர்.
Healthy
a. உடல்நலமுடைய, உடல்நலத்திற்கு உதவுகிற, நலவாழ்விற்குத் துணைபுரிகிற, நலமார்ந்த.
Heap
n. குவியல், (வி.) குவி, குவியலாக்கு, வண்டியில் சரக்குகளை ஏற்றி நிரப்பு, பண்புகளைச் சேர்த்துத் திரட்டு, ஒருங்கு குவி.
Heapstead
n. சுரங்க வழியைச் சுற்றிலுமுள்ள செயற்களக் கட்டிடங்கள்.
Heapy
a. குவியல் நிறைந்த.
Hear
v. கேள், கேள்விப்படு, செய்தியுணர், தகவல்பெறு, அறியப்பெறு, காது கொடுத்துக் கவனி, வழக்குக் கேள்வி முறை செய், வழக்கு வாதத்தைக் கேள், முறையீட்டுக்குச் செவிசாய், வேண்டுகோளைக் காதுகொடுத்துக் கவனி, வேண்டுதலுக்கு இணங்கியருள்.
Hearing
n. செவிப்புல அறிவு கேள்வி, வழக்குக் கேள்வி முறை, கவனம், உற்றுக்கேட்டல், கேட்கும் தொலை, கேட்டுணரும் வாய்ப்பு.
Hearing-aid
n. செவிடர் கேட்க உதவும் பொறியமைவு, கேள்விப்புலனை மேம்படுத்தும் பொறியமைவு.
Hearken
v. உற்றுக்கேள், கவனித்துக்கேள்.
Hearsay
n. கேள்வியறிவு, கேட்டுணர்ந்த செய்தி, பொதுப்பேச்சு, ஊர்திச்செய்தி.