English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Headmistress
n. பள்ளித்தலைவி, தலைமை ஆசிரியை.
Head-note
n. தலைப்புக்குரிய குறிப்பு, சட்ட முற்குறிப்பு, மூலப் பதிவேட்டால் தரப்படும் பொதுக்குறிப்பு.
Head-on
a. தலையோடு தலையான, முகப்புடன் முகப்பான நிலையுடைய, தலைநேரே சென்று மோதும் நிலையுடைய.
Head-on
adv. தலை நேரே சென்று மோதும்படி, தலைநேராக உள்ள நிலையில்.
Headphone
n. தலைமேல் அணியப்படும் தொலைபேசிக் கருவியிலுள்ள 'குரல் வாங்கி'.
Headpiece
n. தலைச்சீரா, இருப்புத்தொப்பி, தொப்பி, குல்லாய், தலைப்பகுதி, மண்டை ஓடு, மூளை, அறிவாற்றல் உடையவர், உச்சிப்பகுதி, அச்சுத்துறையில் நுலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப்பகுதி.
Headquarters
n. தலைமை அலுவலகம், செயற்கள மையம், தளபதி அலுவலகம்.
Heads
n. pl. நாணயத் தலையுருவப்பக்கம்.
Head-sea
n. கப்பல் செல்லும் திசைக்கு நேர் எதிராக ஓடும் கடல்.
Headship
n. தலைவர் நிலை, தலைவர் பணி.
Headsman
n. தலைவெட்டுத் தண்டனையாற்றுபவர், திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர்.
Headspring
n. தலையூற்று, மூலப் பிறப்பிடம்.
Head-square
n. தலைமீது அணியப்படும் சதுரக்குட்டை, தலை மூடப் பயன்படும் சதுரத் துணி, சவுக்கம்.
Headstall
n. தலைப்பகுதியில் மாட்டப்படும் சேணத்தின் பகுதி.
Head-stock
n. பொறியின் சுழலும் பகுதிகளிலுள்ள உராய்வு தாங்கி உருளைகளின் தொகுதி.
Headstone
n. கல்லறைக்கல், மூலக்கல், அடிப்படைக்கல்.
Headstrong
a. தன்மூப்புள்ள, பிடிமுரண்டான.
Head-tire
n. தலையணி, தலைக்கோலம்.