English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Historiographer
n. வரலாற்றெழுத்தாளர், அரசவைப் பணித்துறை சார்ந்த வரலாற்று எழுத்தாளர்.
Historiography
n. வரலாற்று எழுத்தாண்மை.
History
n. வரலாறு, சென்றகால அறிவு, இனவளர்ச்சி பற்றிய ஆய்வு, மனித உலக வாழ்வு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, நிகழ்ச்சிக்கோவை, பொதுமுறை நிகழ்ச்சிகளின் முறைப்பட்ட தொடர்ப் பதிவீடு, இறந்தகாலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுதி, நாட்டு நிகழ்ச்சித் தொடர்பு விளக்கம், மனித வாழ்க்கை நிகழ்ச்சித் தொடர்பு, பொருள் தோற்ற வளர்ச்சித் திரிபு விளக்கம், இயல்கலைத் தோற்ற வளர்ச்சி விளக்கம், இயற்கை நிகழ்ச்சிகளின் முறையான விளக்கம்.
Histrion
n. நாடகமேடை ஆட்டக்காரர்.
Histrionic
a. நடிப்புச் சார்ந்த, நடிகர்களுக்குரிய, நாடகப்பாங்கான.
Histrionics
n. pl. நாடகமேடைக்கலை, நடிப்புத்திறம், மேடைக்குரிய பண்பு, நாடகப்பண்புவாய்ந்த செயற்கையான நடை, புறவேடம், பகட்டு.
Histrionism, histrionicism
n. நடிப்பு, செயற்கை நடை.
Hit
n. அடி, தட்டு, வெட்டு, குறிதவறாத எறி, வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு, வேட்டு எறிதல், அடித்தல், வேட்டு எறிவாய்ப்பு, வசைத் தாக்குதல், வாய்ப்பு, நல்வாய்ப்பு, குருட்டடி, யோகம், வாய்ப்பான திடீர்த்துணுக்கு, உணர்ச்சிக் கௌவுகை, விருப்பம் கப்புதல், கெலிப்பு, (வி.) அடி, வெட்டு, தட்டு, குத்து, இலக்குவைத்தெய், குறிநோக்கி வேட்டுச் செலுத்து, குறியில்படும்படி செய், இலக்கு நிறைவேறப் பெறு, தாக்குதலுக்கு ஆளாக்கு, சென்று மோது, மோதி வீழ்த்தி, காயப்படுத்து, புண்படுத்து, திடீர் உணர்வுகொளுத்து, சேதத்துக்குள்ளாக்கு, வசைத்தாக்குதல் செய், மீதுபடு, சென்றெட்டு, சென்றடை, நேர்வெற்றிபெறு, வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை, தகுதியாயிரு, பொருந்துறு, திடீரென்று நினை, சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு.
Hitch
n. வெட்டியிழுப்பு, திடீர் உந்தல், குலுக்கு, திடீர் அதிர்ச்சி, இடைத்தடங்கல், இடக்கு, சிக்கல், முட்டுப்பாடு, தடங்கல் காரணமாக இடைத்தாமதம், வண்டியுடன் வண்டி இடைக்கொளுவுதல், இடையிணைப்பு, நடப்பவர்க்கு இடையே ஊர்திகளில் அளிக்கப்படும் ஏற்றுதவி, (கப்.) முடிச்சுக் கண்ணிவகை, (வி.) வெட்டி வெட்டிச் செல், வெட்டியிழுத்துக் கொண்டு செல், தட்டுத் தடங்கலுறு, பட்டுத்தடைபடு, முடிச்சிட்டு இணை, கொளுவி இணை, இணைக்கப்பெற்றிரு, இடையே ஊர்தியிலேறிச் செல்லும் உதவிபெறு, வெட்டித்தாக்கு, மூட்டை முடிச்சுக்களுடன் நட, கதையில் இடைச்செருகு.
Hitch-hike
n. இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடத்தும் நடைப்பயணம், (வி.) இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய்.
Hi-tech industries
உயர் - தொழில்நுட்பத் தொழிலகம் (தொழில் நுட்பம்)
Hither
a. இப்பக்கமுள்ள, அருகிலுள்ள, இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள, (வினையடை) இவ்விடத்துக்கு, இவ்விடம் நோக்கி.
Hitherto
adv. இந்நேரம் வரை.
Hitherward, hitherwards
adv. இப்பக்கம் நோக்கி.
Hitlerism
n. செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி.
Hive
n. செயற்கைத் தேன்கூடு, தேனீக்கள் நிரம்பிய கூடு, ஆரவார மொய்ப்பிடம், மொய்திரள், (வி.) தேனீக்களைக் கூட்டில் வை, கூட்டில் ஒருங்குதிரட்டு, கூட்டில் புகு, தேனீக்கள் போல ஒருங்கு கூடிவாழ், கூட்டமாகத் தங்கிடம் கொள், ஆட்களுக்கு வாய்ப்பான தங்கிட வசதிசெய், திரட்டிக்குவி, சேமித்து வைத்துப் பேணு.
Hives
n.pl. தோல்வீக்கம், படைநோய், குடல்வீக்கம், தொண்டை அழற்சி.
Hliotropism
n. தாவங்களின் ஔத நோக்கிய சாய்வு.
Ho
int. வியப்புக் குறிப்பு, ஆர்வப் பாராட்டுக் குறிப்பு, வெற்றிக் குறிப்பு, ஏளனக் குறிப்பு, கவனஈர்ப்புக் குறிப்பு.
Hoar
n. மூப்பு, நரைமுதிர்தோற்றம், உறைபனி வெண்திரை, (பெ.) மூப்பால் நரைத்த, சாம்பற் சாயல் கலந்த வெண்ணிறமான, நரைவௌளையான, வௌளை பூத்த, காலத்தால் முதுமை வாய்ந்த, மிகப்பெரும் பழமை வாய்ந்த.