English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hircine
a. வௌளாடு போன்ற.
Hire
n. வாடகை, வாடகை ஏற்பாடு, கூலி, கூலி ஒப்பந்தம், ஊதியம், (வி.) வாடகைக்குக் கொடு, வாடகைக்கு எடு, கூலிக்கு அமர்த்து.
Hireling
n. கையாள், கூலிக்கு உழைப்பவர்.
Hire-purchase
n. தவணைக்கு வாங்கும் முறை, குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாடகைத் தவணைகள் கொடுத்தபின் பொருள் வாடகைக்கு எடுத்தவன் உடைமையாகிவிடும் முறை.
Hirsute
a. மயிரடர்ந்த, பரட்டையான, பம்பையான, கோதாத.
His(1), pron, he
என்பதன் உடைமை வேற்றுமை வடிவம்.
Hispid
a. (வில.) மயிரடர்ந்த, (தாவ.) முள்ளடர்ந்த.
Hiss
n. 'உசு' என்ற ஒலி, சீறொலி, பாம்பின் சீறல், தீயணைப்பினால் ஏற்படும் 'சுறீர்' ஒலி, (வி.) சீறு, 'உசு' ஒலி எழுப்பு, 'உசு' ஒலியால் மறுப்பு ஏளனக் குறிப்பு எழுப்பு, வெறுப்புத் தெரிவி, ஒலி எழுப்பிக் கண்டனம் தெரிவி, ஒலி எழுப்பித் துரத்து.
Hist
int. கவனி என்ற கவன ஈர்ப்புக் குறிப்பு, சும்மா இரு என்ற பேச்சடக்குக் குறிப்பு, நாய் தூண்டும் குறிப்பு.
Histogenesis
n. உயிர்த்தசைமங்களின் உருவாக்கம், உயிர்த்தசைக் கூறுகளின் உருத்திரிபு.
Histogenetic
a. உயிர்த்தசைமங்களின் உரு ஆக்கத்திரிபு சார்ந்த.
Histology
n. உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல்.
Historian
n. வரலாற்றாசிரியர்.
Historiated
a. எழுத்துக்கள் வகையில் ஆள் அல்லது விலங்கு உருவத்தால் ஒப்பனை செய்யப்பட்ட.
Historic
a. வரலாற்றுப் புகழ்பெற்ற.
Historical
a. வரலாற்றுச் சார்பான, வரலாற்றுக்குரிய, வரலாற்றுத் தொடர்புடைய, வரலாற்றிலிருந்து பெறப்பட்ட, வரலாற்றைப் பின்பற்றிய, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, வரலாற்றுப் பின்னணியுடைய, வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த, வரலாற்று வாய்மையுடைய, பழங்கதை சாராத, கற்பனையல்லாத, மெய்யான, வரலாற்றுத் துறைக்குரிய, சென்ற காலத்துக்குரிய, தற்காலஞ் சாராத.
Historicity
n. வரலாற்று வாய்மை, மெய்ம்மைப்பாடு.
Historigraphic, historiographical
a. வரலாற்று எழுத்தாண்மை சார்ந்த.