English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hinny
n. பெண்கழுதையினிடமாகப் பொலி குதிரைக்குப் பிறந்த விலங்கு, கோவேறுகழுதை வகை.
Hint
n. சிறு நினைவுக்குறிப்பு, நினைவூட்டுச் செய்தி, பயில், சாடைக்குறிப்பு, (வி.) மெல்ல நினைவூட்டு, சிறு நினைவுக் குறிப்பளி, பயில்காட்டு, சாடையாகக் குறி.
Hinterland
n. (செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம், கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி.
Hip
-1 n. இடுப்பு, ஒக்கலை, மோட்டு இணைப்புவாரி, (வி.) இடுப்புச்சுளுக்கவை, இடுப்பைக் காயப்படுத்து, இடுப்பு மீதாகத் தூக்கியெறி, மோட்டு இணைப்புவாரி வைத்துக்கட்டு.
Hip
-2 n. காட்டு ரோசாச் செடியின் காய்.
Hip
-3 n. மனவாட்டநோய், சூம்படைவுக் கோளாறு, (வி.) சோர்வுறச் செய்.
Hip
-4 int. குழு மகிழ்ச்சி அழைப்புக் குறிப்பு.
Hipbath
n. குந்து தொட்டிக்குளிப்பு.
Hip-disease
n. இடுப்புநோய், இடுப்புச் சந்தில் காளான் வகை வளர்ச்சியினால் ஏற்படும் கோளாறு.
Hipe
n. மற்போர் எறிவகை, (வி.) மற்போர் எறிவகை கையாளு.
Hip-joint
n. இடுப்புச்சந்து.
Hippocentaur
n. குதிரை உடலுடன் மனித உடற்பகுதியும் கையுமுடைய உருவம்.
Hippocras
n. மணமூட்டப்பட்ட இன்தேறல்.
Hippocrene
n. பண்டைக் கிரேக்க கலைத்தெய்வங்களுக்கு உரிய மலையின் ஊற்று.
Hippodrome
n. பண்டை ரோமாபுரி மக்களின் தேரோட்டப் பந்தயச் சதுக்கம், வையாளிவீதி, விலங்குப் பயிற்சிக்காட்சி வட்டரங்கு, களியாட்டக் கொட்டகைவௌத.
Hippogriph, hippogryph
n. குதிரை உடலுடன்கூடிய கற்பனைக் கொடுவிலங்குருவம்.
Hipponcampus
n. கடற்குதிரை போன்ற சிறு மீன்களின் இனம், மூளையின் பின்புறமுள்ள இருமேடுகளில் ஒன்று.
Hippophagy
n. குதிரைத் தசை தின்னும் வழக்கம்.
Hippopotamus
n. நீர்யானை.
Hip-roof
n. கீழ்விளிம்பும் பக்கங்களும் சாய்வான மோடு.