English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Irruption
n. படையெடுப்பு, வல்லந்தமான நுழைவு.
Irvingite
n. திருமாணவர் திருச்சபை என்ற பெயருடைய கத்தோலிக்கக் கழகத்தைச் சேர்ந்தவர்.
Is
v. 'பீ' என்னும் வினைச்சொல்லின் படர்க்கை ஒருமை நிகழ்கால வடிவம்.
Isabel, Isabell a
தவிட்டு மஞ்சள் நிறம், (பெயரடை) தவிட்டு மஞ்சள் நிறமுள்ள.
Isagogic
a. தோற்றுவாயான, அறிமுகப்படுத்துகிற.
Isagogics
n. pl. விவிலிய நுல் பற்றிய இலக்கிய வரலாற்றாய்வுத்துறை.
Isatin
n. (வேதி) அவுரி நீலத்தை உயிரகமூட்டுவதனால் கிடைக்கும் செந்நிற மணி உருப்பொருள்.
Ischiadic, ischaitic
இடுப்பனைச் சார்ந்த.
Ishmael
n. விவிலிய நுல்கூறும் இஷ்மாயில் போன்றவர், சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர், சமூகத்தோடு மாறுபட்டவர்.
Ishmaelite
n. இஷ்மாயிலின் மரபினர், பெடாவி அராபிய இனம் சார்ந்தவர், சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர்.
Isinglass
n. மீன் பசைக்கூழ்.
Islam
n. முகம்மதிய சமயம், முகம்மதிய உலகம்.
Island
n. தீவு, நீர்சூழ்நிலம், திட்டு, தனி ஒதுக்கிடம், தனி மைய இடம்., தெருக்கடப்பு நெறியில் இடைகாப்பான மேட்டிடம், கப்பலின் மேற்கட்டுமானம், கப்பற் பாலம், (உட) தனி இழைமத்தொகுதி, தனி உயிர்மத்தொகுதி, (வினை) நீர்சூழ்ந்த நிலமாக்கு, தனிப்படுத்தி வை, தீவுகளைப்போல் திட்டுகள் இணை.
Islet
n. சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம்.
Ism
n. சிறுதீவு, தனித்து வேறாயுள்ள பகுதி அல்லது இடம்.
Isobar
n. (வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
Isobaric
a. (வானிலை) சம அழுத்த இட எல்லைகுறிக்கிற.
Isocheim
n. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு.
Isocheimal, isochimenal
n. குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு, (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற.