English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Italics
n. pl. வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
Italiot, Italiote
பண்டைய இத்தாலியிலுள்ள கிரேககக் குடியேற்றப்பகுதியாளர், (பெயரடை) தென் இத்தாலியிலிருந்த பண்டைய கிரேக்க குடியேற்ற நாடுகள் சார்ந்த.
Itch
n. சிரங்கு, தோலில் அரிப்புக்காணும் தொற்றுநோய் வகை, நமைச்சல், அமைதியற்ற பேரவா, ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது அடையவேண்டுமென்னும் துடிதுடிப்பு, (வினை) தோலில் அரிப்புணர்ச்சி கொள், ஒன்றைச் செய்யவேண்டும் அல்லது ஒன்றை அடையவேண்டுமென அமைதியற்ற ஆர்வங்கொள்.
Itch-mite
n. தோலைத் துளைத்துச் சிரங்குக்குக் காரணமாயிருக்கும் சிறு பூச்சி வகை.
Item
n. உருப்படி, இனம், வகை, எண்ணிக்கைக்குரிய ஒன்று, எண்ணிக்கைப் பிரிவு, குறிப்பெண், பத்திரிகைச் செய்தி குறிப்பு விவரம், (வினையடை) இதுபோலவே,. இன்னும் மேலும், கூட.
Itemize
v. வகைவகையாகச்சொல்லு.
Iterate
v. கூறியது கூறு, மீண்டும் மீண்டும் செய்.
Iteration
n. இரட்டுறுத்தல், கூறியது கூறல், செய்தது செய்தல்.
Ithuriels spear
n. மெய்த்தூண்மைக்கான உரையாணி.
Ithyphallic
n. கிரேக்க மதுத்தெய்வப் பாடல், ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு, (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த, மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
Itinerant
a. அலைந்து திரிகிற, சற்றாடி வருகிற, நடுவர் வகையில் இடத்துக்கு இடம் செல்கிற, மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரஞ் சுற்றி வருகிற.
Itinerary
n. வழி, பயணஞ்செல் நெறி, பயண விரிவுரை ஏடு, பயண வழிகாட்டு விவர ஏடு, வழிகாட்டு நுல், (பெயரடை) பயணஞ் செய்வது சார்ந்த, பயண நெறி பற்றிய.
Itinerate
v. ஊரூரய்ப் பயணஞ் செல், மெதடிஸ்ட் என்ற கிறித்தவ திருச்சபைக் குருமார் வகையில் வட்டாரத்திலிருந்து வட்டாரமாகச் செல்.
Its
a. 'இட்' என்பதன் பொருள் வேற்றுமை வடிவம், 'இட்' என்பதன் உடமைப்பொருட்பெயர் வடிவம், அதன், அதனுடைய, இதன், இதனுடைய.
Itself
pron அதுவே, தானே, அதனையே.
Ivories
n. pl. தந்தப் பொருள்கள்.
Ivory
n. தந்தம், யானை-நீர்யானை-கம்பிளியானை-திமிங்கிலம் முதலிய விலங்கு வகைகளின் மருப்பு தந்தத்தின் நிறம், (பெயரடை) தந்தத்தினாலான, தந்தம் போன்ற.
Ivory-nut
n. தென்னமெரிக்க பனைவகையின் கொட்டையின் பருப்பு.
Ivory-tree
n. வெட்பாலை மரம்.