English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Irrecusable
a. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத.
Irredeemable
a. மீட்கமுடியாத, திரும்பப்பெற முடியாத, சீர்திருத்த முடியாத, உருப்படாத.
Irredentist
n. இத்தாலி முதலிய கீழ் ஐரோப்பிய நாடுகிளில் அவ்வந்நாட்டு மொழி பேசும் மாவட்டங்கள் அவ்வந்நாட்டைச் சேர வேண்டும் என்ற கோட்பாட்டாளர்.
Irreducible
a. குறுக்க முடியாத, விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத.
Irrefragable
a. (அறிக்கை வாதம் ஆள் முதலியன பற்றிய) செய்திவகையில் மறுக்க முடியாத,. வாத வகையில் எதிர்வாதிட முடியாத, ஆள்வகையில் எதிர்த்துப் பேச முடியாத.
Irrefrangible
a. மீறமுடியாத, ஔதக்கதிர் வகையில் கோட்டுறுத்த முடியாத,. கோட்ட நீர்மையற்ற.
Irrefutable
a. பொய்யென எண்பித்துக் காட்ட முடியாத, மறுக்கமுடியாத, எதிர்த்து வாதாட முடியாத.
Irregular
a. ஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
Irregulars
n. pl. ஒழுங்காகப் பணித்துறையிலில்லாத படைவீரர் தொகுதி.
Irrelative
a. தொடர்பில்லாத, உறவற்ற, உறவினரற்ற, தனித் தன்னிலையான.
Irrelevant
a. தொடர்பற்ற, செய்திக்கு ஒவ்வாத, தலைப்புக்குப் பொருத்தமற்ற.
Irreligion
n. சமயப்பற்றின்மை, சமய மறுப்பு, சமய வெறுப்பு, சமயப்புறக்கணிப்பு.
Irremediable
a. சீர்ப்படுத்தவியலாத, சரிப்படுத்த முடியாத, குணப்படுத்த முடியாத.
Irremissible
a. மன்னிக்க முடியாத, மாற்ற முடியாதபடி கண்டிப்பாகக் கட்டுப்படுத்துகிற.
Irremovable
a. விலக்க முடியாத, பணியிலிருந்து அகற்ற முடியாத.
Irreparable, a.,
காலவகையில் சரிசெய்ய இயலாத, சேதவகையில் சீர்ப்படுத்த முடியாத.
Irreplaceable
a. ஈடு செய்யமுடியாத,. இழப்பு வகையில் இட்டு நிரப்ப முடியாத.
Irrepressible
a. அடக்கிவைக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத.
Irreproachable
a. குறை காணமுடியாத, குற்றமற்ற, நேர்மையான.
Irresistible
a. தடுக்கமுடியாத, எதிர்த்து வெல்ல முடியாத, பெருவலி வாய்ந்த, கவர்ச்சி வகையில் தடுக்க முடியாத வலிமையுடன் ஈர்க்கிற.