English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
King
n. அரசன், தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன், மன்னன், நாட்டாட்சியாளன், வணிக வேந்தர், சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய், கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய், சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு, பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை, (வினை) அரசனாகச் செயலாற்று, ஆட்சி செய், அரசனாக்கு.
Kingbird
n. துறக்கப்பறவை, நியூகினி என்ற தீவைச் சார்ந்த அழகிய இறகுத் தொகுதிவாய்ந்த பறவை வகை.
Kingbolt
n. முதன்மையான பெரிய முளை.
King-cobra
n. கருவழலை, இராசமாநாகம்.
Kingcraft
n. ஆட்சித்திறம், திறம்ப அரசோச்சுங் கலை.
King-crow
n. கிகிணி, வலியன்.
Kingcup
n. கிண்ணவடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை.
Kingdom
n. முடியரசு நாடு, மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பரப்பு, அரசு, இராச்சியம், ஆட்சிப்பகுதி, நிலப்பகுதி, இயற்கைப்பொருள்களின் இனப்பிரிவு, இனப்பரப்பு, பெருவகுப்பு, அருளாட்சி, ஆரளாட்சி எல்லை.
Kingfisher
n. மீன் கொத்திப் பறவை.
Kinglet
n. குட்டி அரசர், பொன்னிறச்சூட்டுடைய பறவை வகை.
Kingmaker
n. மன்னர்களைப் படைக்கும் ஆற்றலுடையவர், (வர.) ஆறாவது ஹென்றி ஆட்சிக்காலத்திலிருந்த வார்விக்கு கோமகன்.
Kingpost
n. நடுமரம்,கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
Kingship
n. குருதித் தொடர்புடைய உறவினர்.
Kink
n. குணக்கல், கோட்டம், கம்பி-சங்கிலி அல்லது கயிற்றில் விழும் இடைமுறுக்கு, மனக்கோட்டம், மனக்கவிவு, கொக்கி, கொளுவி, (வினை) முறுக்குவிழு, குளக்கலுறு, முறுக்கிக்கொள், கயிற்றில் முளுக்கு விழச்செய்.
Kinkajou
n. இரவுநடமாட்டமுடைய ஊனுண்ணும் மஜ்ம் வாழ் அமெரிக்க விலங்குவகை.
Kinnikinic
n. அமெரிக்க இந்தியர்கள் புகையிலைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கலவைப்பொருள் வகை, புகைக்கும் கலவைப் பொருள்வகை தருஞ்செடி.
Kino
n. மருந்துவகையிலும் தோல் பதனிடுவதிலும் துவர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படும் வேங்கை மரவகையின் பிசின்.
Kinsfolk
n.pl. குருதித் தொடர்புடைய உறவினர்.
Kinship
n. அரசு, அரசபதவி, அரசநிலை, அரசருக்குரிய மதிப்பு.
Kiosk
n. எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம், செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வௌதப்புறக்கடை, பொதுத்தொலைபேசிக்கான வௌதப்புறக் கட்டமைப்பு, பொதுத் தொலைபேசி அமைவு.