English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Kip
n. பதனிட்டுப் பயன்படுத்தப்படும் இளவிலங்கின் தோல்.
Kipper
n. முட்டையில் பருவத்தில் மீன்வகையில் ஆண் இனம், மீன் உணங்கல், உப்பிட்டு உலர்த்தப்பட்ட மீன் வகை, (வினை.) மீன் வகைகளை உப்பிட்டு உணக்கு.
Kirghiz
n. காஸ்பியன் கடற் கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர், காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தவர் மொழி, (பெ.) காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சார்ந்த.
Kirk
n. வடஇங்கிலாந்து ஸ்காத்லாந்து வழக்கில் திருக் கோயில்.
Kirk-man
n. ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபை உறுப்பினர்.
Kirsch,kirschwasser
n. காட்டுப் பழவகைகளின் புளிப்பேறிய தேறலிலிருந்து வடித்து இறக்கப்படுஞ் சாராய வகை.
Kirtle
n. மேலங்கி, உள்ளுடை வகை.
Kiss
n. முத்தம், மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துகளுக்கிடையே நேரும் மோதல், இனிப்புத் தின்பண்ட வகை, (வினை) முத்தங்கொடு, முத்தமிடு, மேசைக்கோற் பந்தாட்ட வகையில் பந்துடன் பந்து மோதச் செய்.
Kissing
n. முத்தமிடல், (பெ.) முத்தங்கொடுக்கிற.
Kissing-crust
n. ரொட்டி சுடுகையில் ஒன்று மற்றொன்றோடு ஒட்டயுள்ள பகுதியிலிருக்கும் மென்தோடு.
Kissing-gate
n. ஒரு தடவை ஒருவரை மட்டும் செல்லவிடும் பளவுவடிவ அடைப்புக் கதவு.
Kiss-in-the-ring
n. இளைஞ்களிடையே ஒருவர் வேறு பாலராயுள்ள மற்றொருவரைத் துரத்திக் கொண்டுபோய் முத்தமிடும் விளையாட்டுவகை.
Kiss-me-quick
n. செடிவகை, மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை, குட்டையான முன் மயிர்ச்சுருள்.
Kit
-1 n. மரத்தொட்டி, படைவீரர் முட்டைமுடிச்சுத் தொகுதி, மூட்டை முடிச்சுப் பை, பயண ஆயத்த அணி, தொழிலாளியின் கருவிகலத் தொகுதி, (வினை.) ஏற்படுத்திக் கொடு, ஆயத்தஞ் செய், சித்தஞ் செய்யப்பேறு.
Kit-bag
n. நீட்டுப்பை, படைவீரரின் அல்லது பயணக் காரரின் ஆடை அணிமணிப்பை.
Kit-cat
n. (வர.) ஆங்கில நாட்டில் 'விக்கு' கட்சி அரசியல்வாதிகள் கொண்ட கழகத்தின் உறுப்பினர்.
Kitchen
n. அடுக்களை, சமையலறை, மடைப்பள்ளி.
Kitchener
n. சமையலறை வேலையாள், சமையலறை மேலாள், சமையற் சூட்டடுப்பு.